திருப்பதி லட்டுக்கு நெய் விற்ற பணம் கோவிந்தா - மதுரை ஆவின் அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்
மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இதில், பால் உபபொருட்கள் விற்பனையில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து 5 பேர் சஸ்பெண்ட் செ
மதுரை: நெய், வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து மதுரை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிப்புக்காக மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியது மற்றும் வெளிச்சந்தையில் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்தது உள்ளிட்டவற்றில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவது போக தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
விலையும் குறைவு தரமானதாகவும் இருக்கும் என்பதால் ஆவின் நிறுவன உபபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் பொருட்கள் விற்பனை செய்வதில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டதட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்த புகார்கள் ஆவின் நிர்வாக இயக்குனர் நந்தகோபாலிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஆட்சி மாறிய உடன் காட்சிகளும் மாறியுள்ளன.
முறைகேடுகள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை ஆவின் நிறுவனத்தில் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில், மேலாளர் மணிகண்டன், உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முறைகேடுகள் குறித்து தோண்ட தோண்ட பல பூதங்கள் வெளிப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications