'நம்ம முதல்வர் சாமானியர்களுக்கான முதல்வர்.. அவரது அன்பில் நெகிழ்ந்து போனேன்..' மாணவி ஷோபனா உருக்கம்
மதுரை: உயர் கல்வி படிக்க உதவி கேட்ட ஷோபனா என்ற பெண்ணை நேரில் சந்தித்து முதல்வர் உதவிகளை வழங்கினார் செய்தார். இந்நிலையில், தன்னை போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் சாமானிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த மாணவி தெரிவித்தார்.
மதுரையை அடுத்துள்ள திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா. +2 படித்து முடித்துள்ள இவருக்கு, கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பண வசதி இல்லாததால் தன்னால் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மாணவி ஷோபனா இந்த கடிதத்தை எழுதியிருந்தார். இதைப் பரிசீலித்த முதல்வர் அலுவலகம், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் ஷோபனா பிபிஏ படிக்க ஏற்பாடு செய்தது.

முதல்வருக்குக் கடிதம்
தமிழ்நாடு அரசு எடுத்த இந்த நடவடிக்கையால் பெரும் மகிழ்ச்சி அடைந்த ஷோபனா, தனது கோரிக்கையை ஏற்றுக் கல்வி பாதிக்கப்படலாம் தொடர வழிவகை செய்த முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையாக உள்ளது என்றும் ஆனால் மதுரையிலிருந்து சென்னைக்கு வர தங்களிடம் பண வசதி இல்லை என்று மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதமும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் அரசுத் திட்டப் பணிகளின் ஆய்வுகள் செய்த மதுரை வந்த மு.க ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது முதல்வரின் உத்தரவின் பெயரில் திருவேடகம் கிராமத்திற்கு அரசு வாகனம் அனுப்பப்பட்டுள்ளது. ஷோபனா, அவரது பெற்றோர், சகோதரி ஆகியோர் ஆகியோரை அழைத்து வந்த அந்த அரசு வாகனம், அவர்களை முதல்வர் தங்கியிருந்த மதுரை விருந்தினர் மாளிகையில் விட்டுச் சென்றது.

மாணவி ஷோபனா
முதல்வர் ஸ்டாலினைப் பார்த்தவுடன் உணர்ச்சி பொங்கி அழுத மாணவி ஷோபனா, கல்வியைத் தொடர ஏற்படு செய்து தந்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஷோபனா படிப்பதற்குத் தேவையான புத்தகப்பை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், நிதியுதவி ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஷோபனா, தன்னை போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் சாமானிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

சாமானிய முதல்வர்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எனது தந்தை கூலி வேலை தான் பார்த்து வருகிறார். இதனால் +2 முடித்த பிறகு, கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தும் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக நான் முதல்வருக்குக் கடிதம் எழுதினேன். இதையடுத்து முதல்வர் எனக்கு அரசு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தார். இதை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கவே மாட்டேன். முதல்வரை நேரில் சந்திப்பேன் என்று எனது கனவிலும் எதிர்பார்க்கவில்லை. என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் சாமானிய முதல்வர் நமக்குக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications