தேனி பெண்ணுடன் திருமணம்.. குழந்தையுடன் மண்டபத்துக்கு வந்த ஆசிரியை.. ட்விஸ்ட் தந்த மதுரை மாப்பிள்ளை
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு தேனியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் மண்டபத்தில் விறுவிறுப்பாக நடந்தது. தாலி கட்டும் நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் ஆசிரியை ஒருவர் வந்தார். அவர் கண்ணீர் மல்க மாப்பிள்ளை என்னை ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறினார். இதை கேட்டு ஆடிப்போன உறவுகள் திருமணத்தை நிறுத்தினர். இறுதியாக மணமகன் தந்த ட்விஸ்டை இந்த பதிவில் பார்ப்போம்.
திருமணத்திற்கு முன்பு காதலித்திருந்தால், அதுபற்றி வெளிப்படையாக பெற்றோரிடம் பேச வேண்டும். சிலர் பெற்றோரிடம் மறைக்கிறார்கள். இறுதியாக திருமணம் செய்து ஒரு பெண்ணையும், திருமணம் செய்யாமல் இன்னொரு பெண்ணையும் ஏமாற்றுகிறார்கள். சிலர் திருமணம் ஏற்பாடுகள் நடக்கும் போது, தாலி கட்டும் முன்பு உண்மையை சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்கள். இது மண வீட்டாரை பெரிய அளவில் பாதிக்கிறது. மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

மதுரையை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர், ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும், தேனியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று காலையில் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது,
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் கண்ணீர் சிந்தியபடி அந்த திருமண மண்டபத்துக்குள் வந்தார். அவரை பார்த்ததும் மணமக்களின் உறவினர்கள் ஒருவித கலக்கத்துடன் ஓடோடி வந்ததார்கள்.
அந்த பெண்ணிடம், யார் நீ? எதற்காக இங்கு வந்து அழுகிறாய்? என கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதற்கு அந்த பெண், "மதுரையை சேர்ந்த நான், தனியார் பள்ளி ஆசிரியை. இங்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை என்னை ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு பிறந்ததுதான் இந்த குழந்தை" என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம் மணப்பெண் வீட்டாருக்கு இடியாக வந்தது. அந்த பெண்ணிடம் அவர்கள் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது மணமகனுக்கும், ஆசிரியைக்கும் உள்ள திருமணம் தெரியவந்தது. 2021-ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்துக்கு உடற்பயிற்சி செய்வதற்காக மதுரையைச் சேர்ந்த ஆசிரியை சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் ஐ.டி. ஊழியரான இந்த மாப்பிள்ளையும் அங்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளாராம். அங்கு எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. ஆசிரியை வீட்டில் வைத்தே அவர் தாலி கட்டி குடும்பம் நடத்தினாராம்.
அதன் விளைவாக மதுரை தனியார் பள்ளி ஆசிரியை கர்ப்பம் அடைந்துள்ளாராம். கடந்த 7-ந் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதேநேரத்தில் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் தகவல் கிடைத்து மனம் உடைந்த ஆசிரியை, தனக்கு நீதி கேட்கவும், அவருடன் சேர்த்து வைக்கும்படி கேட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே அந்த பெண் திருமண மண்டபத்துக்கு வந்தது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து, மணமகனிடம் விசாரித்தனர். அவரும் பெண் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. அந்த பெண்ணுடன் வாழ விரும்புகிறேன் எனவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் குழந்தையுடன் வந்த பெண்ணுடன் மணமகனை போலீசார் அனுப்பி வைத்தனர். தேனி மணப்பெண் வீட்டார் இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications