மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட்டில்.. உடையை கிழித்து "சீண்டப்பட்ட" பெண்கள்! ச்சீ என்ன கொடுமை இது? ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பெண்கள் சீண்டப்பட்டதாகவும், சிலர் பாலியல் ரீதியாக தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஹாப்பி ஸ்ட்ரீட் என்பது கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் நகரத்தின் முக்கிய சாலை மூடப்பட்டு அங்கே இளைஞர்கள், குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் போடப்பட்டு, கொண்டாட்டங்கள் அரங்கேறும்.

Madurai Happy Street Horror: Woman attacked, teased and molested by men, using the huge crowds

தமிழ்நாட்டை மீண்டும் உற்சாக மாநிலமாக மாற்ற, இளைஞர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்க, சுற்றுலாவை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. சென்னையில் பல்வேறு ஏரியாக்களில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல் மற்ற மாவட்டங்களில் உள்ள பெரிய நகரங்களுக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்: அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவங்கள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பெண்கள் சீண்டப்பட்டதாகவும், சிலர் பாலியல் ரீதியாக தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அண்டை மாவட்ட மக்கள்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரையின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து இருந்தனர். மதுரை அண்ணாசாலையில் இதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 10000 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டதால் போலீசாரால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

கடுமையான கூட்டம் காரணமாக கடைசியில் வேறு வழியின்றி பாதியில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தொடக்கத்தில் நிகழ்ச்சி ஆடல், பாடல், பேச்சு என்று சிறப்பாக சென்றது என்றாலும் அதன்பின் கூட்டம் அதிகரித்ததால் மோதல் ஏற்பட்டு, கடைசியில் மிதியடி பட்டு யாருக்கும் எதுவும் ஆக கூடாது என்பதால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

பசங்க மோசம் - காலை உடைத்து, சட்டையை கிழித்து: முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆண்கள் இருக்கும் பகுதியை தாண்டி வந்து இவர்கள் ஆட்டம் போட்டது. கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்களை தொட்டது, சில இடங்களில் தனியாக மாட்டிக்கொண்ட ஒன்றிரண்டு பெண்களை வளைத்து அவர்களை சீண்டியது என்று எல்லை மீறி உள்ளனர்.

உள்ளே மாட்டிக்கொண்ட பெண் ஒருவர் ஊடகங்களில் அளித்த பேட்டியில்.. பெண்கள் பலர் கடுமையாக சீண்டப்பட்டனர். சிலரின் ஆடைகளை கூட கிழித்தனர். இவர்களுக்கு அஞ்சி ஓடிய பெண் ஒருவருக்கு கால் கூட விழுந்ததில் உடைந்தது என்று கொடூரத்தை விவரித்து உள்ளனர் .

எல்லை மீறி சம்பவங்கள்: பல இடங்களில் இப்படி இளைஞர்கள் அந்த நிகழ்ச்சியில் எல்லை மீறினார்கள். முதலில் தங்களுக்கு உள்ளேயே கோஷம் போட்டு, ஆட்டம் ஆடி இருந்தனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி பெண்கள் பக்கம் வந்தனர். கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு தொட்டால் யார் தொட்டார்கள் என்று தெரியாது என்பதற்காக மோசமாக சீண்டினார்கள், என்று அங்கே அரங்கேறிய கொடூரத்தை பெண்கள் விவரித்துள்ளனர்.

தவறு எங்கே? - ஒரே ஸ்டேஜ் , கூட்டம்: இந்த நிகழ்ச்சியை முறையாக ஏற்பாடு செய்யாததே இந்த பிரச்சனைக்கு காரணம். ஆண்கள், பெண்கள் இருக்க தனி இடம் கொடுத்தாலும் கூட பேரிகேட் முறையாக கடைசி வரை போடப்படவில்லை. இரண்டு தரப்பிற்கும் இடையில் இன்னும் அதிக இடைவெளி கொடுத்திருக்கலாம்.

அதோடு 3 ஆயிரம் பேர் வருவார்கள் என்றால் 10 ஆயிரம் பேர் வந்திருந்தனர். தேனியில் இருந்து கூட சிலர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஆடுவதற்கு, பாடுவதற்கு அங்கே இடம் இல்லை. ஒரே மேடையை போட்டு இருந்ததால் அதை பார்த்து எல்லோருக்கும் முன்னேறி சென்றதால் மேடைக்கு அருகே மூச்சு கூட விட முடியாமல் கூட்டம் அள்ளியது.

Madurai Happy Street Horror: Woman attacked, teased and molested by men, using the huge crowds

மதுரையில் இப்படியா?: பொதுவாக மதுரை பெண்களை மதிக்க கூடிய மாநகரம், அங்கே மக்கள் இனிமையானவர்கள் என்ற இமேஜ் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அங்கேயே பெண்கள் இப்படி சீண்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் தேவர் ஜெயந்தி நிகழ்வில் பெண்கள் கல்லூரி முன் இதேபோல் பெண்கள் இளைஞர்கள் மூலம் சீண்டப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் கூட பெண்கள் பலர் சீண்டப்பட்ட கொடுமை நடந்தேறியது. கூட்டத்தை பயன்படுத்தி பெண்கள் பலர் சீண்டப்பட்டனர். ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இரவில் கூட பீச்சில் உறங்கி போராட்டம் செய்தனர். ஆனால் இப்போது சாதாரண நிகழ்ச்சிகளில் கூட பெண்கள் சீண்டப்படும் சம்பவங்கள் இளைஞர்களின் தற்காலிக பாலியல் வறட்சி குறித்த விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதீத இணையதள பயன்பாடு, பாலியல் வறட்சி, ரீலிஸ் போன்ற சமூக வலைதள ஆபாசங்களை பார்த்து பெண்களை பார்த்தாலே சீண்ட வேண்டும் என்ற நிலைக்கு பல இளைஞர்கள் தள்ளப்பட்டுவிட்டனரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+