சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் சிபிஐ இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் போலீசாரால் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் தற்காலிகமாக விசாரித்தனர்.

பின்னர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையன்று நீதிபதிகள் சத்யநாராயணா, ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது சிபிஐ அதிகாரிகளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது; விரைவில் அறிக்கை தாக்கல் செய்வோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மூடி சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை ஆக.17-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications