Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு.. 4 பல்கலைக்கழகங்களில் ரெய்டு நடத்தலாம்.. ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களிலும் போலி சான்றிதழ் பெறப்பட்டு குரூப்-1 பணி நியமனம் பெற்ற விவகாரத்தில் உரிய ஆவணங்களை தர மறுத்தால் 4 பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த 2021-ம் ஆண்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் , கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெற தொலைநிலைக் கல்வியில் படித்து போலி சான்றிதழ் சமர்ப்பித்து பலர் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள் என்றார்.

tnpsc group 1 1

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த புகார் குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் சக்திராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மேற்கண்ட பணியிடங்களில் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த தமிழ்வழி கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, குரூப்-1 அதிகாரிகளாக பணியாற்றும் சப்-கலெக்டர், வணிகவரித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 அதிகாரிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து குரூப்-1 பணி நியமனம் பெற்றது உறுதியாகி இருக்கிறது. மேலும் 22 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோல அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களிலும் போலி சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இதற்கான ஆவணங்களை இந்த பல்கலைக்கழகங்கள் 2 ஆண்டுகளாக தராமல் உள்ளன. இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

எனவே மேற்கண்ட 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களையும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக நாங்கள் சேர்க்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் ஒரு நபரை நியமித்து, பல்கலைக்கழகங்களில் இருந்து உரிய ஆவணங்களை பெற வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மேலும் கால அவகாசம் வழங்க நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீதும் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்கிறோம்.

பல்கலைக்கழகங்கள் தரப்பில் இருந்து ஆவணங்களைத்தர தாமதித்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம். இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து வருகிற 28-ந்தேதி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+