சட்டையில் ரகசிய கேமரா! பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்த ரவுடி பேபி சூர்யா.. நீதிபதி அதிரடி
மதுரை: பெண்ணின் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா உள்ளிட்டோர் மீதான வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை முனிச்சலை சாலை, கான்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தான் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தனக்கு இரு மகன்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மூத்த மகன் லண்டனில் பிஎச்டி முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். 2ஆவது மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மக்கள் பார்வை என்ற கல்வி அறக்கட்டளை மூலம் பொதுச் சேவை செய்து வருகிறார்.
அத்துடன் அதே பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் மக்களின் பொதுநலனுக்காக தான் குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சுப்புலட்சுமி எனும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா எனும் சிக்கந்தர் ஆகியோர் யூடியூபில் தனிநபர்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தனர்.
இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்த தியாகவதி, ரவி ஆகியோருக்கு நான் சட்டரீதியான உதவிகளை செய்து வந்தேன். இதனால் ரவுடி பேபி சூர்யாவும் சிக்காவும் என்னை தொடர்பு கொண்டு 8 மாத காலமாக நட்புடன் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ரவுடி பேபி சூர்யா அவருடைய யூடியூப் சேனலில் சித்ரா அக்கா என்னை காப்பாற்றுங்க, கமிஷனர் அய்யா என்னை காப்பாற்றுங்க என கூக்குரலிட்டார்.
எனவே நான் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினேன். நான் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தேன். உடனே ரவுடி பேபி சூர்யா தன்னையும் திருச்செந்தூர் அழைத்து செல்லுமாறு கேட்டார். கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது சிக்கந்தர் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு முதியவரை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக பேசிய ஆடியோ உள்ளிட்ட நிறைய ஆடியோக்கள் இருப்பதாக கூறி அதை என்னிடம் பகிர்ந்தார்.
இதையடுத்து அவரை நான் வீட்டுக்கு செல்லும்படி கூறினேன். என்னுடன் சூர்யா இருந்த நேரத்தில் அவரது யூடியூப் வாயிலாக இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவை சிக்கா, ஆண்டனி என்பவரின் மூலம் டெலிட் செய்ததை அடுத்து எனக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் நான் சிக்கந்தரை கண்டித்து எனது யூடியூப் வாயிலாக வீடியோ வெளியிட்டு வந்தேன்.
சூர்யாவின் அனுமதியுடன் அவர் கொடுத்த ஆடியோவை நான் எனது சேனலில் வெளியிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த சிக்கந்தர் எனது எதிரிகளான சூசை மேரி, அரிக்குமார், கோவை தமிழன் ஆகியோருடன் சேர்ந்து தினமும் வலைதளத்திலும் போனிலும் என்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் என்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் சிக்காவுடன் சூர்யாவும் சேர்ந்து மிரட்டுகிறார். என்னுடன் திருச்செந்தூருக்கு வந்த போது திட்டமிட்டு ஒரு கேமராவை சட்டையில் ஒளித்து வைத்துக் கொண்டு உன்னை மொத்தமாக நிர்வாணமாக வீடியோ எடுத்திருக்கேன். அதை சிக்கா லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோவை இப்போ வெளியிடவா என மிரட்டினார்.
யூடியூப் சேனலில் என்னை தினமும் சிக்கந்தர் உருவ கேலியும் செய்து வந்தார். கோவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறாவிட்டால் மானப்பங்கப்படுத்தி என் மீது அவதூறு பரப்புவதாகவும் கொலை செய்துவிடுவதாகவும் திட்டம் தீட்டி வருகிறார்கள். என்னிடம் பணமும் கேட்கிறார்கள். தராவிட்டால் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டுகிறார்கள்.
எனவே, ரவுடி பேபி சூரியா,சிக்கா,அரிகுமார் கோவை தமிழன் (எ) அரி ஆகியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தேன். இந்த புகாரின் அடிப்படையில் மதுரை நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

எனவே இந்த வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீஸார் விரைவில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குப் பதிவு செய்து 2 மாதங்கள்தான் ஆகிறது,. அதற்குள் என்ன அவசரம் என நீதிபதி கேட்டார்.
அப்போது இவர்கள் ஆபாசமாக பேசுவதாக இவர்கள் மீது 4 வழக்குகள் உள்ளன. எனவே குற்றபத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என சித்ராவின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை, முடித்து 3 மாதங்களில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications