நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.. ஆனா நீங்க பயங்கர நல்லவனா இருக்கீங்களே மோகன்!
மதுரை: நல்லவனா இருக்கலாம், ஆனால் ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது என பேட்ட படத்தில் ஒரு வசனம் வரும். அதற்கேற்ப இங்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ஒருவர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் இன்று ஆகும்.
தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!

தாக்கல் செய்வர்
இந்த வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்கள் சொத்து கணக்கையும் குற்ற பின்னணியையும் குறிப்பிட வேண்டும். சிலர் சொத்து கணக்கை குறிப்பிடும் போது மென்று விழுங்கி தாக்கல் செய்வர். சிலருக்கு சொத்தே இல்லாமல் இருந்தால் உண்மையான கணக்கை தாக்கல் செய்வர்.

வழக்குகள்
அது போல் குற்றவழக்குகள் ஏதேனும் இருந்தாலும் இல்லை என்றே தாக்கல் செய்வது வாடிக்கையாகும். ஆனால் மதுரையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மோகன் தன் மீது இதுவரை உள்ள வழக்குகளை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.

விவரங்கள்
பெட்ரோல் குண்டு போட்ட வழக்கு, அரசு பேருந்தை உடைத்த வழக்கு, கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகளில் எந்தெந்த போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது, எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகிய விவரங்களை அவர் அளித்துள்ளார்.

ஆச்சரியம்
இதை பார்த்த தேர்தல் அதிகாரியே ஆச்சரியப்பட்டுவிட்டார். இதை பார்க்கும் போது பேட்ட படத்தில் வரும் வசனமான நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications