கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை
மதுரை: கொரோனாவில் இருந்து பாதுகாக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மதுரை ஹோட்டல் ஒன்றில் மாஸ்க் புரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
புரோட்டாக்களின் தாயகமாக தென் தமிழகம் திகழ்கிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் புரோட்டாக்கள் ரொம்பவே பேமஸ்.

எத்தனை எத்தனை புரோட்டாக்கள்
அதிலும் வெறும் புரோட்டா என்று போடாமல் எத்தனை வெரைட்டியை தயாரித்து அத்தனை வெரைட்டியாக தருகிறார்கள்.. கொத்து புரோட்டா, வீச்சு புரோட்டா, செட் புரோட்டா, முட்டை வீச்சு புரோட்டா, சிலோன் புரோட்டா , பன் புரோட்டா, மொறுமொறு புரோட்டா என ஏகப்பட்ட ஐயிட்டங்களை தென்மாவட்ட மக்கள் இறக்கி வைத்திருக்கின்றனர்.

தென் தமிழக புரோட்டா
தென் தமிழகத்தில் புரோட்டாவுக்கு சால்னாதான் நல்ல காம்பினேசன். வட தமிழகத்திலும் பரோட்டாவும் கிடைக்கிறது என்கிற வகையில்தான்.. வாழ்க்கையைப் போலவே அனுபவிக்காமல் மைதா மாவை பிசைந்தோமா, போட்டோமா என தயாரிக்கப்படுகிறவை வடமாவட்ட புரோட்டாக்கள்.

வித்தியாசமான மதுரை
தென் தமிழகத்தில் தூங்கா நகரமான மதுரை மாநகரத்தின் ஈவினிங் புரோட்டா ஸ்டால்கள் இன்றளவும் கொடி கட்டிப் பறக்கின்றன. மதுரையில் போஸ்டர்கள், சுவரெழுத்துகள் முதல் கட் அவுட்டுகள் வரை விதம் விதம்தான்.. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்துக்கே வழிகாட்டியாகவும் மிரள வைக்கவும் கூடிய வாசகங்களை அள்ளித் தருவார்கள் மதுரை மக்கள்.

மதுரை மாஸ்க் புரோட்டா
இப்போது கொரோனா காலத்திலும் தங்களது முத்திரையை பதித்திருக்கின்றனர் மதுரை மக்கள். மதுரையில் ஹோட்டல் ஒன்றில் மாஸ்க் புரோட்டாவை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரசாரமாகவும் இந்த மாஸ்க் புரோட்டாவை மதுரை மண் இனிதே அறிமுகப்படுத்தியிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications