நெற்றியில் பூசும் விபூதி.. "வாசலை" தாண்டாத விநோதம்.. மதுரையின் கோயில் வளாகத்திலேயே பரவசத்தில் ஆண்கள்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவொன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்து, தனக்கன்குளம் பிரிவு சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற உச்சிக்கருப்பணசாமி கோவில் .. இங்கு சாமி சிலைக்கு பதிலாக, 2 தூண்களுடன் உள்ள ஒரு பீடத்தின் 2 பக்கமும் வீச்சரிவாள் மட்டுமே இருக்கின்றன. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய வெண்கல மணிகள் ஏராளமாக கட்டி தொங்க விடப்பட்டிருக்கின்றன.

வெள்ளிக்கிழமை: இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பழங்கள் மாற்றி வழிபடும் வினோத வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.. 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்படித்தான் ஆண் பக்தர்கள் மட்டுமே இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டு போவார்கள்..
அதாவது, ஒரு சிறிய பாறை மீது, சந்தனம் + குங்குமத்தை வைத்து, மாலை அணிவித்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக, உச்சி கருப்பணசாமிக்கு மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகளும் படைக்கப்படும்.. கோயிலில் சாமிக்கு முக்கனிகள் படைக்கப்பட்ட பிறகு, பூஜைகளும் முடிந்தபிறகு, கோயிலுக்கு வரும் ஆண்களுக்கு மட்டும் இந்த பிரசாதம் வழங்கப்படும்..
ஆனால், இந்த பிரசாதத்தை வெளியே கொண்டு செல்லக்கூடாது.. அங்கேயே கோயில் வளாகத்தியே சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
பழங்கள் என்றில்லை, திருநீரு முதல் பிரசாதம் வரை எதுவாக இருந்தாலும் இந்த திருக்கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஒரு வினோதமான பழக்கவழக்கம் இன்றும் நடைமுறையில் இந்த கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது.
முக்கனிகள்: அந்த வகையில் தற்போதும் நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டும் பங்கேற்று உச்சி கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகளை வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த முக்கனிகளும் கோயிலுக்கு வந்திருந்த ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இதனை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்பதால், கோவில் வளாகத்திலேயே பழங்களை சாப்பிட்டு சென்றார்கள்.












Click it and Unblock the Notifications