மதுரை தொகுதி: 'மாமதுரை' மண்ணில் மீண்டும் செங்கொடி பறக்கும்? இரட்டை இலை இனி ஒருமுறை துளிர்க்கும்?
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ், திமுக, சிபிஎம் வலிமையான வாக்கு வங்கியை கொண்டிருப்பதால் 'மாமதுரை' மாநகரை தக்க வைக்க சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் தீவிரமாக உள்ளார்.
மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு.

மதுரை லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,76,745; ஆண்கள்- 7,74,381; பெண்கள்- 8,02,176: 3-ம் பாலினத்தவர்- 188
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
மு. க. அழகிரி(திமுக ) 4,31,295
மோகன்(சிபிஎம்) 2,90,310
கவிஅரசு (தேமுதிக) 54,419
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
இரா. கோபாலகிருஷ்ணன் (அதிமுக) 4,54,167
வி. வேலுசாமி(திமுக ) 2,56,731
சிவமுத்துகுமார் (தேமுதிக) 1,47,300
பாரத் நாச்சியப்பன்(காங்கிரஸ்) 32,143
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சு.வெங்கடேசன் (சிபிஎம்) 4,47,075
ராஜ் சத்யன் (அதிமுக) 3,07, 680
டேவிட் அண்ணாதுரை (அமமுக) 85,747
அழகர் (மக்கள் நீதி மய்யம்) 85,048
2024-ம் ஆண்டு களத்தில் நிற்பவர்கள்
சு.வெங்கடேசன் (சிபிஎம்)
சரவணன் (அதிமுக)
ராம ஶ்ரீனிவாசன் (பாஜக)
சத்யதேவி (நாம் தமிழர் கட்சி)
மதுரை லோக்சபா தொகுதி நிலவரம் என்ன?: காங்கிரஸ் 5 முறை வென்ற தொகுதிதான். இப்போது திமுக, அதிமுக வலிமையான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. இடதுசாரி கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் மு.க.அழகிரி இத்தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார். 1998-ல் ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமியும் இங்கு போட்டியிட்டு வென்றார். சிபிஎம் கட்சி 3 முறை வென்றுள்ளது. சிட்டிங் எம்பியாக இருப்பவர் சிபிஎம் கட்சியின் சு.வெங்கடேசன். அதிமுக ஒரே ஒரு முறைதான் இத்தொகுதியில் வென்றுள்ளது. இத்தனைக்கும் அதிமுகவின் அரசியல் வரலாற்றில் மதுரை மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியதாகும். தமிழ்நாட்டின் மிக முக்கியமான பகுதி; தென் மாவட்டங்களின் தலைநகராக இருக்கக் கூடிய தொகுதி என்பதால் களம் காணும் கட்சிகள் வெற்றியை இலக்காக கொண்டு போராடுகின்றன. நெசவு, ஜவுளி, உதிரி பாகங்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்புகள் என பல்வேறு தொழில்கள் சங்கமிக்கும் நகரமாக இருக்கிறது மதுரை. பெரியாறு, வைகை அணை பாசனத்தை நம்பி விவசாயம் உள்ளது. விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்த நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவேற்றப்படாத ஒரு பெருங்கனவாகவே நீடித்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications