மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மேலும் ஒருவர் கைது!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ரூ.60 கோடி நில மோசடி வழக்கில் கவிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே ராஜ்குமார், இளையராஜா, துணை ஆட்சியர் அன்பழகன் ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரூ. 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்துகள் தொடர்பாக பத்திரப்பதிவு முறைகேடு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

Madurai Meenakshi Temple

இந்த புகார்களை தொடர்ந்து, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அப்போதைய வட்டாட்சியர் அன்பழகன் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் தடையை மறைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து, ஜூலை 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமானப் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன், சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளையின் ரூ.60 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரப்பதிவுக்கு உதவிய திண்டுக்கல் சிறுமலை பகுதியை சேர்ந்த கவிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் ராஜ்குமார், இளையராஜா, துணை ஆட்சியர் அன்பழகன் ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மற்றும் இதில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+