தீவிரமடையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி: 19 பேர் மீது வழக்குப்பதிவு! களத்தில் 2 தனிப்படை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முந்தைய அதிமுக ஆட்சியில் தனியாருக்கு பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

Madurai Meenakshi Temple Land Scam Two Special Teams Formed to Probe Illegal Sale

இந்த விவகாரத்தில், முன்னாள் தாசில்தார், முன்னாள் வி.ஏ.ஓ, சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் மோசடி மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செல்லதுரை அளித்த புகாரின் அடிப்படையில், இந்தியத் தண்டனை சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120(B) (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில், மதுரை கொக்கிக்குளம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான சுமார் 0.72 ஹெக்டேர் (1.78 ஏக்கர்) நிலம், அரசுப் பதிவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, போலி ஆவணங்கள் தயாரித்து தனிநபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள், நிர்வாக உத்தரவுகள் மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கைகள் நடைபெற்றிருந்த போதிலும், அவற்றை மீறி ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக முன்னாள் தாசில்தார், முன்னாள் வி.ஏ.ஓ., சார்பதிவாளர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட மொத்தம் 19 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட நிலங்களின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.80 கோடி எனக் கூறப்படுகிறது.

நிலப் பரிவர்த்தனையில் போலி ஆவணங்கள் தயாரித்தல், தவறான உரிமைப் பதிவுகள் செய்தல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+