மதுரை ரயில் விபத்து: 9 பேர் பலிக்கு முழுக்க முழுக்க என்ன காரணம்.. கொந்தளித்த மதுரை எம்பி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ரயில் தீ விபத்திற்கு ரயில் பாதுகாப்பு படையினரின் அலட்சியப்போக்கே காரணம் என மதுரை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் அந்த ரயில் தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Madurai MP Su.Venkatesan condemns RPF for Madurai train Fire accident

ரயிலில் அதிகாலையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்த போது கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்துவிட்டது. வடமாநில கொள்ளையர்களை போல் யாராவது கொள்ளையடிக்க ஏறினால் என்ன செய்வது என்பதற்காக ரயில் பெட்டியை பூட்டியும் ஜன்னல்களை சாத்தியும் வைத்திருந்தனர்.

இதனால் தீப்பிடித்தவுடன் அவர்களால் வெளியேற முடியாத நிலையில் ஏற்பட்டது. மேலும் பலர் வயதானவர்கள் என்பதால் அவர்கள் தூக்கத்தில் இருந்து கண் விழித்து என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் தீ பெட்டி முழுவதும் பரவிவிட்டது. மேலும் ஒரு கழிப்பறை முழுவதும் விறகு கட்டைகளை வைத்திருந்ததால் அதுவும் தீ கொழுந்து விட்டு எரிய காரணமாகிவிட்டது.

Madurai MP Su.Venkatesan condemns RPF for Madurai train Fire accident

இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ரயில்களில் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடிய பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர்களை ரயில்வே போலீஸார் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நாடு முழுக்க எந்த ரெயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை."

"தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப் பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள்.

இந்த விபத்து ரெயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரெயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்," என்று அவர் தெரிவித்தார். மேலும் சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்த போது ரயில் தீவிபத்திற்கு ஆர்பிஎஃப் தோல்வியே காரணம் என்று ரயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன்.

ரயில்களில் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் வாகனம் ரயிலில் அனுமதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+