ஆன்டி இந்தியன் நினைவிருக்கா? இப்போது அவங்களே அப்படி ஆயிட்டாங்க! மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சனம்
மதுரை: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் அழைப்பிதழில் 'இந்திய' குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த மாதம் 9,10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 நாட்களின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 1ன் படி, 'இந்தியாவாக இருந்த பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது" என்று ட்வீட் செய்து விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் விமர்சித்துள்ளார்.
அதாவது, "ஆன்டி இந்தியன் என்று அடுத்தவர்களை சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்பொழுது தாங்களே ஆன்டி இந்தியன் ஆகிப்போனார்கள். 'தமிழ்நாடு' என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது 'இந்தியா' என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல. தேர்தல் பயம், இந்தியா வெல்லும்" என்று விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா உட்பட பல பாஜக தலைவர்கள் அடிக்கடி ஆன்டி இந்தியன் எனும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications