மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்.. போராட்டத்தை அறிவித்தபின் அண்ணாமலை முழிக்கிறார்.. சு.வெங்கடேசன்!
மதுரை: மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்காக போராட்டத்தை அறிவித்துவிட்டு அதிமுக மற்றும் அண்ணாமலை இரு தரப்பும் முழித்து கொண்டிருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். தமிழ்நாடு அரசை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் அரசியல் செய்கிறார்கள் என்று கூறிய சு.வெங்கடேசன், மத்திய அரசு ரயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்க, உடனடியாக தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் அதிமுக தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 5 நாட்களுக்கு பின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் தெரிவித்தார். அதில், மதுரை - தூத்துக்குடி இடையிலாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினார். இதற்கு அமைச்சர் சிவசங்கர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த பின் செய்தியாளர்களை சந்தித்து சு.வெங்கடேசன் பேசுகையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் பண்பாட்டின் முக்கியமான அடையாளம். உழவர் திருநாளின் குறியீடு. உழவில் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடு தான் இந்த விளையாட்டு.
இதில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். தொடர்ந்து மதுரை - தூத்துக்குடி இடையிலான ரயில் பாதை திட்டம் குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் செய்தியாளர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அந்த காணொளியை பார்த்தால், வேறு எந்த சத்தமும் இல்லை. அந்த செய்தியாளரும் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் திட்டம் குறித்த தெளிவாக கேள்வி கேட்கிறார்.
அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அரசு வேண்டாம் என்று கூறிவிட்டதாக சொல்கிறார். அந்த செய்தி தவறானது என்று ரயில்வே அமைச்சர் பேட்டி கொடுத்த ஒரு மணி நேரத்தில் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். ஆனால் அவர்கள் எந்த மறுப்பும் கூறவில்லை. அந்த செய்திக்கு 5 நாட்களாக உயிர் கொடுத்து கொண்டே இருந்தார்கள்.
இது திட்டமிட்டு செய்கிற வேலை. மத்திய அரசு குறிப்பாக ரயில்வே துறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் 5 முறை பேசி இருக்கிறேன். அதற்கான நிதியை கொடுக்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது. வரும் பட்ஜெட்டிலாவது அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்த சில மணி நேரங்களிலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை அறிவிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் போராட்டத்தை அறிவிக்கிறது. ரயில்வே துறை எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய குறைந்தபட்ச புரிதல் இருந்தாலே, செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்திருக்கலாம்.
ஆனால் தமிழ்நாடு அரசை உடனடியாக குற்றம் சொல்ல வேண்டும் என்ற அரசியலில் இருந்து அணுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான கோபமாக இது பிரதிபலிக்கவில்லை. எனவே, அதிமுக அறிவித்த போராட்டத்தையும், அண்ணாமலை அறிவித்த போராட்டத்தையும் என்ன செய்வதென தெரியாமல் முழிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications