“கீழடியில் எதுவெல்லாம் இருக்கிறது பார்” இதுதான் தமிழ்நாடு அரசியல்.. மத்திய அரசை சாடும் சு.வெங்கடேசன்
கீழடி அருங்காட்சியகம் திறப்பது பற்றி சு.வெங்கடேசன் கருத்து பதிவிட்டுள்ளார்.
மதுரை: எதுவும் இல்லையென சொல்லி வெளியேறியது ஒன்றிய அரசியல் என்றும், கீழடியில் எதுவெல்லாம் இருக்கிறது பார் என்று உலகிற்கு காட்சிப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவராக கீழடியை பார்வையிட வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறக்க வருவதையும் சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் நதிகளில் மிகவும் பழமையானது வைகை. இதன் நதிக் கரைகளில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் வைகை ஆற்றின் இருபுறமும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்த 100 இடங்கள் அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வைத் தொடங்கினர்.

வைகை கரை நாகரிகம்
கடந்த 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை கீழடியில் மத்திய தொல்லியல் துறை 3 கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு அங்கு சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. அதன்பின் தமிழ்நாடு தொல்லியல் துறை 4, 5-ம் கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்டது. இதில் 6,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமானப் பகுதிகளும் கண்டறியப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் நிலவியது தெரியவந்தது. மேலும், கங்கை சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது கீழடி நாகரிகம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

எழுத்தறிவுடன் மக்கள் வாழ்ந்த சான்று
தொடர்ந்து, கீழடி மற்றும் அதைச் சுற்றிய மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், மூடிய வடிகால், சுருள் வடிவ சுடுமண் குழாய், உறை கிணறு, பானை ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், இரும்பு பொருட்கள், வெள்ளி காசுகள், எடைக்கற்கள், சக்கரம், முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர கீழடி அகழாய்வில் 1,500-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேலான தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவை, 6-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றுகளாக கருதப்படுகின்றன. தொடர்ந்து, கீழடி மற்றும் அதைச் சுற்றிய மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், மூடிய வடிகால், சுருள் வடிவ சுடுமண் குழாய், உறை கிணறு, பானை ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், இரும்பு பொருட்கள், வெள்ளி காசுகள், எடைக்கற்கள், சக்கரம், முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர கீழடி அகழாய்வில் 1,500-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேலான தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவை, 6-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றுகளாக கருதப்படுகின்றன.

கீழடி அருங்காட்சியகம்
பழங்கால தமிழ்ச் சமூகம் கிமு 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கள அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.8 கோடி செலவில் தமிழ்நாடு மரபுசார் கட்டிடக்கலையின்படி கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் 6 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசியல்
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்று எதிர்கட்சித்தலைவராக கீழடியை பார்வையிட வந்தார். இன்று முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைக்க வருகிறார். எதுவும் இல்லையெனச்சொல்லி வெளியேறியது ஒன்றிய அரசியல். "எதுவெல்லாம் இருக்கிறது பார்..." என உலகிற்கே காட்சிப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல் என்று பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் குரல்
கீழடி தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கீழடி ஆய்வில் தீவிரமான ஆர்வம் காட்டிவந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டது குறித்தும், பின்னர் அந்தப் பொறுப்புக்கு புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி ஆய்வையே முடிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அறிக்கையை கொடுத்ததையும் சு.வெங்கடேசன் கடுமையாக சாடியவர். அதுமட்டுமல்லாமல் கீழடி அகழாய்வை ஆவணமாக்கும் வகையில், வைகை கரை நாகரிகம் என்ற புத்தகத்தையும் சு.வெங்கடேசன் எழுதியுள்ளார்.
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications