கண்ணீர் மல்க வேலை தேடி சென்னை,கோவை,பெங்களூர் செல்லும் எம் மதுரை மக்கள்.. நெட்டிசன் பதிவு
மதுரை: தென் மாவட்டங்களில் முதலீடு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான மதுரைக்கு ஒரு சிறிய நிறுவனம் கூட முதலீடு அறிவிப்பு இல்லை என்றும், சென்னை, பெங்களூரு, கோவைக்கு கண்ணீருடன் மதுரை மக்கள் வேலைக்கு செல்லும் நிலை இருப்பதாக முதல்வரின் பதிவுக்கு நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர்.
மதுரை மாநகரம் என்பது தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாக இருக்கிறது. ஆனால் மதுரையில் எந்த தொழில் முதலீடுகள் பெரிய அளவில் இல்லை. முன்பெல்லாம் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதி மக்கள் துணி எடுக்க, நகை வாங்க, பொருட்கள் வாங்க மதுரைக்குத்தான் வருவார்கள். இன்றைக்கு தங்கள் ஊரை தாண்டி வர வேண்டிய அவசியமே அவர்களுக்கு பெரிய அளவில் ஏற்படவில்லை. இது ஒருபுறம் எனில் மதுரையில் உள்ள பலர் வேலை தேடி சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்கள். மதுரையில் படித்து முடித்து வேலை தேடுவோருக்கு உகந்த நகரமாக இல்லை. பல ஆண்டுகளாக மதுரையில் பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை.. மதுரையில் தொழில் முதலீடுகளும் பெரிய அளவில் வளரவில்லை.. 90களில் இருந்த மதுரை இப்போது இல்லை என்பதே வருத்தமான உண்மை. 2000க்கு பிறகு மதுரை அப்படியே வளராமல் நின்றுவிட்டது.

இந்த சூழலில் அண்மையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் சென்னையை சுற்றித்தான் முதலீடு செய்தன. அதேநேரம் தென்மாவட்டங்களிலும் கணிசமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் 12000 கோடி முதலீடு செய்துள்ளது. இதேபோல் டாடா பவர் எனர்ஜி நிறுவனம் 800 கோடி ரூபாய் திருநெல்வேலியில் முதலீடு செய்துள்ளது. லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் 5442 கோடி ரூபாயை தூத்துக்குடியில் முதலீடு செய்வதாக கூறியுள்ளது. சிம்ப்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் 36238 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் எல்லாம் மின்சக்தி துறையில் தான் முதலீடு செய்துள்ளன.
அதேநேரம் ராமநாதபுரத்தில் டாடா கெமிக்கல் நிறுவனம் 1000 கோடி முதலீடு செய்வதாக கூறியுள்ளத. பின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் 16000 கோடி முதலீடு (மின்சார வாகனங்கள் துறை) செய்வதாக அறிவித்துள்ளது. ஜிண்டால் டிபன்ஸ் நிறுவனம் 1000 கோடியை திருச்சியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தகவல்கள் வந்த செய்தியை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், "தென் மாவட்டங்களின் வளர்ச்சி குன்றியுள்ளது என்ற நீண்டகாலத் தவிப்பு தீர்கிறது! 'அனைத்து மாவட்டங்களுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சி' என்ற நமது திராவிட மாடல் அரசின் அணுகுமுறை பலனளிக்கத் தொடங்கியதன் அடையாளமே இந்தச் செய்தி!" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மதுரை நெட்டிசன்கள், தென் மாவட்டங்களில் முதலீடு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று... ஆனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும் மதுரைக்கு ஒரு சிறிய நிறுவனம் கூட முதலீடு அறிவிப்பு இல்லையே... என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சேதுபதி என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "மாண்புமிகு.முதல்வர் ஐயா அவர்களே, மதுரை என்பது பெரும் வணிகம் பூண்ட ஓர் பழமையான தொண்மை வாய்ந்த நகரம் என்பதில் தங்களுக்கு ஏதேனும் ஐயம் உண்டா? கீழடி அகழ்வாராய்ச்சியில் மதுரையின் தொண்மையை வணிகம் நிறைந்த நகரம் என்றும் தங்களுக்கு செவி சாய்க்க வைத்துள்ளது என்பதில் எனக்கும் எவ்வித ஐயமும் இல்லை.
எனினும் சுமார் 26,77,220 வாக்காளர்களை கொண்ட ஓர் மாநகரம்,அதற்கான வளர்ச்சியை கொண்டுவராத திராவிட மாடல் ஆட்சி, தங்களின் வாயிலாகவே தாங்கள் தெரிவித்ததுப்போல் தென்மாவட்டங்களின் வளர்ச்சி குன்றிதான் உள்ளதை தவிர, வேறொன்றும் சிறந்ததாய் குறிப்பிடும் வண்ணம் இல்லை. தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள மதுரைக்கு உங்கள்.தொழிற்துறை அமைச்சர் T.R.B.இராஜா மற்றும் தங்கள் கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் .சு.வெங்கடசன் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டு வந்தனர் என கணக்கீடு செய்யுங்கள்.கண்ணீர் மல்க வேலை தேடி சென்னை,கோவை,பெங்களூர் செல்லுகின்றனர் எம் மதுரை மக்கள்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications