மதுரை மண்ணில் மோடி.. தோளில் துண்டை போட்டுக்கு கொண்டு.. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செம்ம என்ட்ரி!
மதுரை: வேஷ்டி சட்டை அணிந்து மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, நேரராக மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
Recommended Video

நாளை காலை 11 மணிக்கு மதுரை சுற்றுவட்ட சாலையில் உள்ள அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்,
இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி வந்த தனி விமானம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் பாஜக மற்றும் அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேஷ்டி சட்டை
தமிழர் பாரம்பரியபடி வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்து 'மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு காரில் வந்தார்.

பூரண கும்ப மரியாதை
அங்கு பச்சை துண்டை தோளில் போட்டபடி வந்திறங்கியவர்,மக்களை பார்த்து சிறிது நேரம் கையசைத்தார். உற்சாகத்துடன் கோயிலுக்குள் சென்றவர் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

மதுரை
சீன அதிபரின் வருகையின் போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் வந்த பிரதமர் மோடி அதன் பிறகு தற்போது தான் அதே பாணியில் வேஷ்டி சட்டை அணிந்து வந்திருந்தார். பிரதமர் மோடி மதுரை வரும் போதே வேஷ்டி சட்டையில் வந்திறங்கியதை பார்த்த பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்..

6 மாவட்ட வேட்பாளர்கள்
நாளை மதுரை சுற்றுவட்ட சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications