UPSC தேர்வில் தேசிய அளவில் 2ம் இடம்! மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த ராஜேஸ்வரி! யார் இவர்?
மதுரை: UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முதல் 5 இடங்களில் ஒரேயொரு பெண் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த, ராஜேஸ்வரி என்பவர் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ராஜேஸ்வரியின் சொந்த ஊர் மதுரை. இவர் 2018-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்சாரப் பொறியியல் முடித்தார். சமூகவியல் இவரது விருப்பப் பாடமாகும். இவரது தாய் ஒரு இணைப் பேராசிரியர், தந்தை இருசக்கர வாகன உதிரிபாகக் கடை வைத்திருப்பவர் மற்றும் காப்பீட்டு ஆலோசகராகவும் உள்ளார்.

இவர் ஏற்கனவே TNPSC குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சியின்போது, மாதிரி நேர்காணலில் இவர் அளித்திருந்த பதில்கள் கவனம் பெற்றிருந்தன. இதனை டைம்ஸ் நவ் செய்தி ஊடகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த மாதிரி நேர்காணலில், திருப்பரங்குன்றம் தீப விஷயம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
கேள்வி: மதுரையில் ஒரு மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு சர்ச்சை பற்றி செய்தித்தாள்களில் படித்தேன். அந்த சர்ச்சை என்ன?
ராஜேஸ்வரி: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தீபம் ஏற்றும்போது விளக்கு ஏற்றுவது குறித்த சர்ச்சை அது. சமீபத்தில், அந்தச் சொத்து கோவிலுக்குச் சொந்தமானது என்பதால், இந்து அமைப்புகள் விளக்கு ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கேள்வி: ஆட்சேபனை என்ன? ஏன் நிறுத்தப்பட்டது?
ராஜேஸ்வரி: மாவட்ட நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி அதைத் தடுத்தார்.
கேள்வி: நீங்கள் அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்து இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மக்கள் உத்தரவைப் பின்பற்றவில்லை. அவர்கள் விளக்கு ஏற்றச் செல்லும்போது, மற்றொரு சமூகம் கூடி கற்களை வீசத் தொடங்குகிறது. நீங்கள் சம்பவ இடத்திலேயே இருக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்?
ராஜேஸ்வரி: நான் உடனடியாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பேன். அமைதிப் பேச்சுவார்த்தைக்காகக் குழுத் தலைவர்களை அழைத்து, சமூக மோதலை உடனடியாகத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.
கேள்வி: அவர்கள் செவிசாய்க்காவிட்டால்?
ராஜேஸ்வரி: நான் பெரும் வன்முறை இல்லாமல் காவல்துறைப் படைகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்.
கேள்வி: அவர்கள் பேருந்துகளை எரிக்கவும், சொத்துகளைச் சேதப்படுத்தவும் தொடங்கினால்?
ராஜேஸ்வரி: அப்படியானால், இதில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கூட்டத்தைக் கலைத்து, சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்வோம் என்று பதிலளித்திருந்தார்.
ராஜேஸ்வரி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications