பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து கனிமொழி ஷாக்.. செக்கானூரணி ஸ்டேசனில் டிரைவருக்கு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தூத்துக்குடி எம்பியான திமுகவைச் சேர்ந்த கனிமொழி கருணாநிதி பதிவிட்டுள்ளார்.

கனிமொழி மேலும் கூறுகையில், "தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

Kanimozhi

வலுங்கட்டாயமாக கைது

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அவரது மகன் மற்றும் சகோதரர் உள்ளிட்ட உறவினர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சகோதரர் ஆவேசம்

லாரி ஓட்டுநரின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "என் அண்ணா உயிரிழந்து 3 நாள் ஆகிவிட்டது.. எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுப்பது மாதிரி தெரியல.. சிபிசிஐடி விசாரணை பத்தி எல்லாம் தெரியவில்லை.. யாரும் எங்ககிட்ட பேசவில்லை.. எங்க அண்ணன் நல்லா நடந்து போற மாதிரி வீடியோ காட்டுறாங்க.. அதுலயும் சந்தேகம் இருக்கு.. நேத்து 3 லட்ச ரூபாய் செக் ஒண்ணு கொடுத்து சமாதானப்படுத்தலாம் என்று நினைத்தார்கள். ஒருத்தனை அடிச்சி போட்டு காசு கொடுத்து முடிச்சிவிட என்ன தெருநாயா.. ?" என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

லாரி ஓட்டுநரின் மனைவி பேட்டி

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி கண்ணீருடன் கூறும் போது, அவரை போலீஸ் அடிச்சி தான் கொன்னுருக்காங்க. காயம் எல்லாம் இருக்கு. 3 நாட்களாக என் குடும்பத்தை அழ வச்சி ஏன்யா எங்கள கொடுமைப்படுத்துறீங்க. அவர் வயித்துக்குள்ள எதுவும் வச்சிருக்கீங்களா? அதையும் கூட எடுத்துட்டு போங்களேன். எனக்கு தமிழ்நாடு போலீஸ் விசாரணையே வேண்டாம். என் பிள்ளை மட்டும் தான் எனக்குன்னு இருக்கான். அவனையும் கொன்ற வேண்டாம்னு சொல்லிடுங்க.. வழக்க சிபிஐக்கு மாத்துங்க. அந்த சிசிடிவி வீடியோ ஏஐ தான். லாரி ஓனரை விசாரிக்கணும். இன்சுரன்ஸ் கிளைம் பண்ண இவர ஒத்துக்க சொல்லி அடிச்சி கொன்றுக்காங்க'' என்று கதறியபடி கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கை

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கழுத்தின் இரு பக்கங்களிலும் சாய்வான கயிற்றுத் தடங்கள். கழுத்தின் வலது பக்கத்தில் 3 சிறிய சிராய்ப்புக் காயங்கள். முதுகின் 5 இடங்களில் நீல நிற ரத்தக்கசிவுக் காயங்கள், மூளை வழக்கதை விட அதிகமான எடை (1400 கிராம்) மற்றும் நுரையீரல்களில் வீக்கம், இதயம் சற்று பெரிதாக (358 கிராம்) இருந்துள்ளது. இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் திசுவியல் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+