மதுரை சிம்மக்கல் தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், சிம்மக்கல் தரை பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதாலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் வைகை ஆறும் ஒன்று. மொத்தம் 258 கிலோ மீட்டர் தூரம் இந்த ஆறு பயணிக்கிறது.

தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகையாறானது, மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் உற்பத்தியாகிறது

 வைகை அணை

வைகை அணை

மலையில் இருந்து இறங்கி வரும் இந்த வைகை ஆறானது, வடக்கே பழனி மலைக்குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது. குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும்.

 பரவலாக மழை

பரவலாக மழை

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதற்கிடையே வானிலை ஆராய்சி மையமும்
சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள பகுதிகள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது.

 தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி. .

தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி. .

இதேபோல் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் அருகே உள்ள மரம் செடிகள் செழித்து வளர்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பசுமையான சூழல் நிலவி வருவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 71 அடி என்ற நிலையில், தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இந்தநிலையில், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை சிம்மக்கல் தரை பாலத்தை மூழ்கடித்துபடி தண்ணீர் செல்கிறது. வாகனங்கள் செல்லும் பாலத்தை மூழ்கியபடி இருகரையும் தொட்டு தண்ணீர் ஓடுவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். பலர் அங்கிருந்து செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

 மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏற்கனவே மழையின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில்,
நாளை மீண்டும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை சிம்மக்கல் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள் விளையாடவும் அனுமதிக்க வேண்டாம். மீன்பிடிக்கவும் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+