ஒரு நியாய தர்மம் வேண்டாமா? தெறித்து ஓட வைக்கும் சுயேட்சை வேட்பாளர் 'ரிப்ளை'
மதுரை: வாக்குறுதி கொடுக்க ஒரு நியாய, தர்மம் வேண்டாமா? என்னமோ போங்க.. இந்த சுயேட்சை வேட்பாளரின் பேச்சை கேட்கும் அளவுக்கு பாடியில சக்தியில்ல.. உங்களாக முடிகிறதா-னு பாருங்க.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணனின் தேர்தல் வாக்குறுதிகள் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதில், தொகுதி மக்கள் அனைவருக்கும் 'ஐபோன்' வழங்கப்படும். உலக வெப்பமயம் ஆவதால் தொகுதி சில்லென இருக்க 300 அடி உயர செயற்கை பனிமலை உருவாக்கப்படும். விடுமுறை நாளில் மக்கள் பொழுதுபோக்குக்காக செயற்கை கடல் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் சுற்றுலா பயணமாக 100 நாட்கள் நிலவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம். போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டப்படும். இதில் பயணம் செய்ய வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும் என்று சத்தியமாக சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது இவர் அளித்த பேட்டி தான் இன்னும் வேதனையை அளிக்கும் வகையில் உள்ளது. அதில், "வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், கார், நிலவுக்கு பயணம்' போன்ற பல வாக்குறுதிகள் சாத்தியமா? என்று அனைவரும் கேட்கின்றனர்.
இவை அனைத்தும் சாத்தியம் என்றே நான் நினைக்கிறன். ஆனால், எங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும் அவ்வளவுதான்" என்று மனசாட்சியே இல்லாமல் பதில் அளித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் தெறித்து ஓடாத குறை தான். எனினும், இன்னும் சிலர் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை விட இவரது அறிக்கைகள் பரவாயில்லை என்று இவருக்கு சப்போர்ட் செய்யாமலும் இல்லை.
தல சுத்துதே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications