சபாஷ்! எய்ம்ஸ் நடத்திய நுழைவுத்தேர்வில் மதுரை மாணவர் இந்திய அளவில் முதலிடம்!
மதுரை : எய்ம்ஸ் நடத்திய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான எம்.சி.எச் நுழைவுத்தேர்வில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஹரி நாராயணன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள ஒன்பது எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உள்ள DM, MCH மற்றும் MD மருத்துவமனை நிர்வாகப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை எய்ம்ஸ் நடத்திய நிலையில், தகுதிப் பட்டியல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஹரி நாராயணன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். எம்.சிஎச் நுழைவுத்தேர்வில் 100க்கு 64 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார் ஹரி நாராயண்.

ஹரி நாராயணனின் பெற்றோர் டாக்டர்கள் லதா, முருகன். ஹரி நாராயண் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து, சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்.எஸ் அறுவை சிகிச்சை படித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக அதில் சிறப்பு பிரிவாக குடல் அறுவை சிகிச்சைக்கான எம்.சிஎச் படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் நடத்திய நுழைவுத் தேர்வில் பங்குபெற்றார் ஹரி நாராயண். அதில் முதலிடம் பெற்று தேர்வடைந்துள்ளதால், ஹரி நாராயணுக்கு டெல்லி எய்ம்ஸில் குடல் அறுவை சிகிச்சைக்கான மேற்படிப்பு சீட் உறுதியாகியுள்ளது.
மூன்றாண்டு படிப்பு முடித்த பின் மீண்டும் மதுரை வந்து தென்மாவட்ட மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை தொடர விரும்புவதாகவும், செலவுகளை குறைத்து நோயாளிகளை அலைக்கழிக்காமல் சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஹரி நாராயண் தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications