ஃபுல் சேஃப்டி.. ஆல் ஓவர்! தீ விபத்து குறித்து ஹைகோர்டில் அடித்து சொன்ன மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு முறையான அனுமதி வாங்கிய பிறகே திறக்கப்பட்டது என்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது
சென்னை: அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த பிறகே மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதன் நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது.
மதுரையில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு தற்காலிகமாக தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு முறையான அனுமதி வாங்கிய பிறகே திறக்கப்பட்டது என்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட 10 மாடிகளை கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் புதிதாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கட்டிடத்தின் 9 வது மாநிலத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

முழுமையடையாத கட்டிடம்?
கடுமையான புகை வெளியேற காரணத்தால் அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்கட்டமைப்பு பணிகள் முழுமையடையாத சூழலில் கட்டிடத்தை திறந்ததே இந்த தீ விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 13 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், "கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது." என விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர் செவ்வாய்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications