தனிஷ்க் கொள்ளை! நிஷாந்த் பதுங்கியுள்ள இடத்தை போட்டுக்கொடுத்த மீனாட்சி? 2வது நாளாக நகை வேட்டை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசாரின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கொடுத்த முக்கியத் தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தை போலீசார் மிக நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை நகைக்கடையின் லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய யூடியூபர் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Madurai Tanishq Heist

மீனாட்சி கொடுத்த முக்கியத் துப்பு

கைது செய்யப்படுவதற்கு முன்பு நடந்த விசாரணையிலும், வாக்குமூலத்திலும் மீனாட்சி பல முக்கிய ரகசியங்களைப் போலீசாரிடம் உடைத்துள்ளார். குறிப்பாக, நிஷாந்த் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது, யாருடைய உதவியுடன் அவர் பதுங்கியிருக்கக்கூடும் என்பது குறித்த முக்கியத் தடயத்தை மீனாட்சி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே திருப்பூரில் வைத்து முன்பின் தெரியாத ஒருவரின் செல்போனில் இருந்து மீனாட்சிக்கு நிஷாந்த் போன் செய்திருந்தார். தற்போது மீனாட்சி கொடுத்த புதிய தகவலையும், செல்போன் நெட்வொர்க் சிக்னல்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், நிஷாந்த் பதுங்கியுள்ள இடத்தை தனிப்படை போலீசார் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டனர். 9 தனிப்படைகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதால், எந்த நேரத்திலும் நிஷாந்த் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாடக்குளத்தில் 2-வது நாளாகத் தீவிர சோதனை

மறுபுறம், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகளை மீட்கும் பணியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மீனாட்சி அடையாளம் காட்டிய இடத்தின் அடிப்படையில், நேற்று மதுரை மாடக்குளம் கண்மாய் மற்றும் அதன் அருகிலுள்ள விவசாய நிலப் பகுதிகளில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் தோண்டி எடுத்தனர்.

மொத்தம் 11 கிலோ நகைகள் திருடு போயுள்ள நிலையில், இன்னும் சுமார் 5 கிலோ நகைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. நிஷாந்த் மீதமுள்ள நகைகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றாரா அல்லது மாடக்குளம் பகுதியிலேயே வேறு எங்காவது மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

இதனால், மாடக்குளம் கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திறந்தவெளிப் பகுதிகளில் இன்றும் இரண்டாவது நாளாகப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நகைகளைப் பதுக்கி வைக்க வேறு யாரேனும் நிஷாந்துக்கு உதவினார்களா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிஷாந்த் பிடிபட்டால் மட்டுமே மீதமுள்ள நகைகள் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்பதால், காவல்துறையினர் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+