Madurai Tanishq: சென்சார் அலாரம் அடிக்கும் நகைகளை மட்டும் தொடாத கொள்ளையன்! போலீஸுக்கு கிடைத்த க்ளூ?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் சென்சார் ஒலி எழுப்பும் நகைகளை தவிர்த்துவிட்டு மற்ற நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றதால் கடை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல Tanishq நகைக் கடையில் சுமார் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Madurai Tanishq

கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த நகைக்கடை திறக்கப்பட்டு சுமார் 15 நாட்களே ஆகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் திறப்பு விழாவும் நடத்தப்படவில்லை. மேலும், கடையின் உள்புறப் பணிகளும் முழுமையாக நிறைவடையாத நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

மோப்பநாய்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

30% திருட்டு

இதற்கிடையே, மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளதாக தெரிவித்தார். கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

70 சதவீதம் முடிந்தது

இந்த கொள்ளை சம்பவம் குறித்து முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடை திறக்கப்பட்டாலும் முழுவதுமாக கட்டடப் பணிகள் நடைபெறவில்லை. 70 சதவீதம் முடிந்த நிலையில் 30 சதவீத பணிகள் நடைபெற்று வருகின்றன.

முகமூடி கொள்ளையன்

இந்த கொள்ளை குறித்து கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு கொள்ளையன் முகமூடி அணிந்தபடி மூட்டை மூட்டையாக நகைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனால் நகைகளை கொள்ளையடிக்க 3-க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல்களின்படி, கடைக்கு ஒரே ஒரு கொள்ளையன் மட்டுமே வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஒரு மணி நேரமாக நிறுத்தி நிதானமாக நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

கற்கள் பதித்த நகைகள்

கற்கள் பதித்த நகைகளாக இருந்தால் விற்பனை செய்தால் பணம் குறைவாக கிடைக்கும் என்பதால் கற்கள் பதிக்காத நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இந்த கொள்ளையனை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரும்பு சாரத்தில் ஏறி மொட்டை மாடி ஜன்னல் வழியாக வந்த கொள்ளையன், லிப்ட்டை தாங்கும் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு கடையின் தரைதளத்திற்கு வந்தார். அங்கிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு நேதாஜி மெயின் ரோடு வழயாக சென்றுவிட்டார்.

சைரன் ஒலி

அது போல் சில நகைகளை எடுத்தால் சைரன் ஒலி எழுப்பும். அது போல் சைரன் ஒலி எழுப்பாத நகைகளை மட்டுமே அந்த கொள்ளையன் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதனால் நன்கு தெரிந்த நபர்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பார் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

25 ஊழியர்களிடம் விசாரணை

இந்த கடையில் பிளம்பிங், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளை செய்தவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் கடையில் பணியாற்றும் 25 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் அவர்களின் கைவிரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+