தனிஷ்க் கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சி, தவெக உறுப்பினரா? மதுரை கமிஷனர் ஆபிஸுக்கு ஓடிய எம்எல்ஏ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியார் தவெக உறுப்பினர் என தொடர்புபடுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தவெக நிர்வாகி புகார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

மதுரை பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடையில் சமீபத்தில் நடைபெற்ற நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மீனாட்சி நாச்சியார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனப் பொய்யாகச் சித்தரித்து, பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

madurai tanishq

மேலும், சம்பந்தப்பட்ட பெண்மணி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இத்தகைய பொய்யான தகவல்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயருக்கும், நற்பெயருக்கும், கட்சியின் கண்ணியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, இத்தகைய தவறான தகவல்களை உருவாக்கி, திட்டமிட்டு வெளியிட்டு, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பரப்பி வரும் நபர்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பதிவுகள் மற்றும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அதற்குப் பொறுப்பான நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், தவறான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைச் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி மதுரை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கபாண்டியன் கூறுகையில், தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான பெண்ணை தவெக நிர்வாகி என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். இதற்கு பின்புலமாக திமுக உள்ளது.

கட்சி தலைமையின் ஆலோசனைப்படி புகார் அளித்துள்ளோம். எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் நான் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளேன். இதில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

நகைக் கடை கொள்ளை வழக்கில் கைதான பெண் தவெக உறுப்பினர் அல்ல ; இது போன்ற நபர்கள் எங்கள் கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+