Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 14 வருடங்கள் கழித்து மகா குடமுழுக்கு! மதுரை குலுங்குது

Subscribe to Oneindia Tamil

மதுரை: அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று மாபெரும் கும்பாபிஷேகம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.. இன்று அதிகாலை 5:45 மணி முதல் 6.15 மணிக்குள் இந்த மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பக்தர்கள் குவிந்துள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.. இந்நிகழ்விற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றிருக்கிறது.. அதிகாலை 4:30 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர் அடங்கிய தங்க, வெள்ளிக் குடங்கள் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

madurai thiruparankundram maha kumbabhishekam

ராஜகோபுரம்

இந்த வைபவத்தையொட்டி ரூ.90 லட்சத்தில் கோவிலின் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டது. அதேபோல, 'கல்கம்' என்ற 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டது.

கடந்த 11-ந் தேதி 2-ம் கால, 3-ம் கால யாகவேள்விகள் நடந்து முடிந்தன.. பிறகு நேற்று முன்தினமும், காலை மாலை என 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகவேள்வி நடந்தது... நேற்றைய தினமும் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக வேள்விகள் நடந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெற்றுள்ளன.

சிவாச்சாரியார்கள்

தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களில் இருந்து 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜையை நடத்த, 85 ஓதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்தன.. இன்று அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு ஆரம்பமானது..

அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்து வருகிறது. இன்று அதிகாலை 5:45 மணி முதல் 6.15 மணிக்குள் இந்த மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

உள்ளூர் விடுமுறை

பல்வேறு சிறப்புகளை பெற்ற திருத்தலம் என்பதுடன்,முருகனின் முதல் படை வீடு என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. எனவேதான், இதனை மாவட்ட நிர்வாகம் குடமுழுக்கை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது.

அதேபோல, பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹார்விபட்டி சந்திப்பு,நிலையூர், மலைக்கு பின்புறம் உள்ள கிரிவலப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள்.. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வரிசையாக செல்வதற்கு இருபுறமும் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடமுழுக்கை பக்தர்கள் ஆங்காங்கே நின்று காண்பதற்காக 27 எல்இடி திரைகள் திருக்கோவிலை சுற்றி வைக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..

இந்த கும்பாபிஷேகத்தை கோயில் ராஜகோபுரம் லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியால் ஜொலித்து கொண்டிருக்கிறது.. ராஜகோபுரத்தில் புதிதாக 'வேல்' மின் அலங்காரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள கடைகள், வியாபார நிறுவனத்தினரும் மின் அலங்காரம் செய்திருக்கிறார்கள்.

வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர்.. வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.. இதனால், கும்பாபிஷேக விழாவால் திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கட்டண விவரம்

காலை முதலே பல ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.. காலை 7 மணி முதல் தொடர்ந்து 14 மணி நேரம் வரை மூலவரை தரிசனம் செய்யலாம். கட்டண தரிசனத்தை முழுமையாக தவிர்க்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டது.. அதன்படியே இன்றும், நாளையும் பக்தர்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

இதனிடையே உபயதாரர்கள் மட்டுமின்றி, ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்படும். மாவட்டம் முழுவதிலும் முக்கிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+