Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரைக்கு இது பொற்காலம்.. இது என்ன ட்வின் டவர் மாதிரி இருக்கே.. அடியோடு மாறும் பாண்டியர்கள் பூமி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.

1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதோடு பின் டெக் துறையிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும்.

பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.

Madurai Tidel park renders released: One of the design will be finalised soon

மதுரையில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது. மதுரை சுங்கடி சேலைகள், மதுரை ஆயத்த ஆடைகள், அப்பளம் ஆகியவை பிரபலம் ஆனது. இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரையில் டைடல் பார்க் கொண்டு வரப்படும்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இரண்டில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மதுரை மெட்ரோ தொடர்பான பல்வேறு ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.

இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.

திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.

Madurai Tidel park renders released: One of the design will be finalised soon

எத்தனை ஸ்டாப்கள்: மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.

இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+