மதுரையில் இருந்து பெங்களூருக்கு நாளை முதல் வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில்.. நாமக்கல் குஷி.. ஆஹா சர்ப்ரைஸ்
மதுரை: நாளை முதல் இயக்கப்படும் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் 2 நிமிடம் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதேபோல நாமக்கல்லுக்கும் குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி, நவீன வசதிகளுடன் அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு அம்சம்: முழுக்க முழுக்க AC வசதியுடன், புல்லட் ரயில்களுக்கு இணையான வேகத்துடன், நவீன தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் ஆதரவை முதல்நாளிலிருந்தே அபாரமாக பெற்று வருகிறது. இதில் டிக்கெட்டுகள் லேசில் கிடைப்பதில்லை.. எப்போதுமே முன்பதிவு முடிந்தவாறே உள்ளதாக பயணிகள் சொல்கிறார்கள்.

நம்முடைய தமிழகத்திலும்கூட, சென்னை - கோவை, சென்னை - பெங்களூரு, சென்னை - நாகா்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன... முக்கிய நகரங்களுக்கு இடையே 55க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கூடுதல் வசதிகள்: இந்த ரயில்களுக்கு கிடைக்கும் மக்களின் மாபெரும் வரவேற்பை பார்த்து சுழற்சி அடிப்படையில் அந்தந்த ரயில்வே கோட்டங்களுக்கு கூடுதலாக வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டு வருகிறது... இதைத்தவிர படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களும் தயாராகி வருகிறது.
ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும்கூட, வந்தே பாரத் ரயிலையே பயணிகள் விரும்புகிறார்கள். இதற்கு காரணம், நேரம் மிச்சமாவதுடன், நிறைய வசதிகள் ரயிலில் செய்யப்பட்டுள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு நாளை (ஜூன் 26) முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான வழித்தடத்தையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கட்டணங்கள்: காரணம், மதுரையிலிருந்து திருச்சி வழியாக வந்தே பாரத் ரயிலை இயக்கினால் நேரமும், கட்டணமும் அதிகரிக்கும் என்பதால், மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.. இதையடுத்து, மதுரை பெங்களூரு வந்து சிறப்பு ரயிலும் திருச்சி வழியாக இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது.
அத்துடன், மதுரை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டதால் இந்த ரயில் துவக்கி வைப்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது..
மதுரை ரயில்கள்: அதன்படி நாளை அதாவது ஜூன் 26ம் தேதி புதன்கிழமை முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வரை வந்த பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இந்த சிறப்பு ரயில் அடுத்த மாதம் ஜூலை 29 தேதி வரை இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
மதுரையிலிருந்து நாளை அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 7 மணிக்கு திருச்சியை அடைந்து பிறகு 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக மதியம் ஒரு மணிக்கு பெங்களூரை சென்றடையும். அதுபோலவே, மறு மார்க்கத்தில் அதே நாள் மதியம் 1:45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வரும் இந்த ரயில், 7.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரையை வந்தடையும்.
மதுரை- பெங்களூருக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரமானது 7 மணி நேரமாக இருந்து வருகிறது.. ஆனால், இப்போது வந்தே பாரத் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், வெறும் 6 மணி நேரத்திலேயே சென்றடையலாம்.
எல்.முருகன்: இதனிடையே, நாமக்கல்லில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் இல்லை என்ற கோரிக்கையும் எழுந்தது.. இதையடுத்து, நாமக்கல் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா், மத்திய தகவல் ஒளிபரப்பு - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகனிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவையும் அளித்திருந்தனர்.. தற்போது இவர்களது கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல்: அந்தவகையில், இந்த ரயில் மதுரையில் இருந்து வரும்போது காலை 8.32 மணிக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து வரும்போது பிற்பகல் 5.33 மணிக்கும் நாமக்கல்லை வந்தடைகிறது. 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்ற அறிவிப்பானது ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications