மதுரை டூ சென்னை.. போடிநாயக்கனூர் சென்ற சென்ட்ரல் ரயில், மதுரை அருகே தடம் புரண்டது..தேனியில் பரபரப்பு
மதுரை: சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்துக்கானது திடீர் பரபரப்பை மதுரையில் ஏற்படுத்தி வருகிறது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று தீபாவளி என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் கடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. ஆனால், அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், பலரும் ரயில் பேருந்துகளை நாட ஆரம்பித்துவிட்டனர்.

சிறப்பு ரயில்கள்: எனவே, பலரும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததையடுத்து, தெற்கு ரயில்வேயும் 4 நாட்களுக்கு மன்பு சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.. அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது.. கடந்த அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரையில் இருந்து காலை 8.15க்கு புறப்பட்டு, திண்டுக்கல்லுக்கு 9.22க்கும், திருச்சிக்கு 10.30க்கும், அரியலூருக்கு 11.38க்கும். விருத்தாச்சலதிற்கு 12.18க்கும், விழுப்புரத்திற்கு மதியம் 1.08க்கும் வரும். மேல்மருவத்தூருக்கு 2.08க்கும். செங்கல்பட்டிற்கு 2.38க்கும், தாம்பரத்திற்கு பிற்பகல் 3.25க்கும் வரும்.
மறுமார்க்கம்: அதேபோல் மறுமார்க்கமாக வரும் அக்டோபர் 29, 30. நவம்பர் 2ம் தேதிகளில் மாலை 5.10க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 5.38க்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 6.08க்கும், விழுப்புரத்திற்கு இரவு 7.13க்கும், விருத்தாச்சலத்திற்கு இரவு 8.08க்கும், அரியலூருக்கு 9.13க்கும், திருச்சிக்கு 10.35க்கும், திண்டுக்கல்லுகு 11.52க்கும், மதுரைக்கு மறுநாள் அதிகாலை 1.20க்கு (புதன்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படியே மதுரைவாசிகள் தீபாவளியை கொண்டாட ரயில்களில் ஆர்வமாய் பயணித்து கொண்டிருக்கிறார்கள்..
தடம் புரண்டது: இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே இன்று காலை திடீரென தடம் புரண்டது. ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது... மதுரை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று தீபாவளி பண்டிகையின்போது, திடீரென ரயில் தடம் புரண்டது மிகப்பெரிய பரபரப்பை போடி பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.
சென்னையிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மதுரை ரயில் நிலையத்தை இன்று காலை வந்தடைந்தபோதுதான், எஞ்சினுக்கு அடுத்த பெட்டிடியின் சக்கரம் திடீரென சுழன்றுள்ளது.. இந்த ஆபத்தை உணர்ந்ததுமே, உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டுவிட்டது..
மாற்று ரயில்: பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் பழுதான ரயிலின் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.. அவர்களுக்காக உடனடியாக மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.. ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பயணிகளை ரயில்வே ஊழியர்கள பாதுகாப்பாக அந்த மாற்று ரயிலில் அனுப்பி வைத்தனர். இதனால், தீபாவளியை முன்னிட்டு, மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications