மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்து... உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே.. தமிழக அரசு நிவாரணம்
மதுரை: ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர்.

புனலூரில் இருந்து வந்த ரயில் மூலம் சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வந்தனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மளமளவென தீ பற்றியதில் இரண்டு பெட்டிகள் தீயில் கருகி நாசமாகின.
இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சிலிண்டரே காரணம். அவைகளை பயன்படுத்தி பயணிகள் சமையல் செய்ய முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலை 5.45 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து அமைச்சர், ரயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே விபத்து குறித்து தகவல்கள் அறிய 93605 52608, 80156 81915 ஆகிய இரண்டு கட்டணமில்லாத தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications