தென் தமிழகத்துக்கான ரயில்வே, விமான நிலைய திட்டங்கள் எதுவுமே இல்லையே.. மதுரை வர்த்தகர்கள் குமுறல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென் தமிழ்நாட்டுக்கான ரயில்வே, விமான திட்டங்கள் எதுவுமே மத்திய பட்ஜெட்டில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக மதுரை வர்த்தகர் சங்கங்களின் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொழில் வணிகத்துறையினர் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்த போதும் மத்திய பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றம் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா தவிர இதர மாநிலங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு தொழில்துறையினரும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Budget 2024 madurai 2024

மத்திய பட்ஜெட் தொடர்பாக மதுரை தொழில் வர்த்தகர் சங்கத்தினர் இருவேறான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மடீட்சியா தலைவர் லெட்சுமி நாராயணன் கூறுகையில், இயந்திரங்கள் வாங்க ரூ100 கோடி கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு- குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு. புதியதாக தொழில் தொடங்க ஜான்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இவற்றை வரவேற்கும் நேரத்தில் ஜிஎஸ்டி மற்றும் சட்டங்களை எளிமைப்படுத்தாதது ஏமாற்றம் தருகிறது என்றார்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம் கூறுகையில், 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி ரத்து, 3% வட்டியில் கல்வி கடன் உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம். முத்ரா கடன் திட்ட உச்சவரம்பு ரூ20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறோம். தமிழ்நாட்டிலும் கோடைவாசஸ்தலங்கள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் இருந்தும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை அறிவிக்காதது பெரும் ஏமாற்றமாகும். மதுரை- தூத்துக்குடி தொழில் வழித்தடம் குறித்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஜனாதிபதி உரையில் குறிப்பிட்டிருந்த ராணுவ தொழிற்சாலை குறித்தும் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கருத்து தெரிவிக்கையில், தென் தமிழ்நாட்டுக்கு ஒரு ரயில்வே திட்டமோ, மெட்ரோ திட்டமோ, விமான நிலைய திட்டமோ எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வருமான வரி குறைப்பு அறிவிப்பால் பெரிய அளவில் எந்த பலனுமே இல்லை. ஜிஎஸ்டியில் உள்ள 28% வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+