மதுரைக்கு வர்றாரு கள்ளழகர்.. மண்ணைத் தொட்ட வைகை! வரவேற்ற குட்டி மீனாட்சி! பறந்த முக்கிய கோரிக்கை!
மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதிக்கு வந்தடைந்த வைகை நதிநீரை பூக்கள் தூவி வரவேற்றனர். மீனாட்சி அம்மன், கள்ளழகர்,கருப்பசாமி வேடமணிந்து குழந்தைகள் வைகையை வரவேற்றனர். இந்நிலையில், புனிதமான வைகை நதியை மாசு இன்றி பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டபடி வைகை நதிக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர்கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாண வைபவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, திருக்கல்யாண வைபோகத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கும் புது தாலி கயிறு மாற்றிக் கொண்டனர்.

மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வரும்போது வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக இன்று மாலை கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பாடாகும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நாளை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.
இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 12 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறும். இதற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை முதல் 12 ஆம் தேதி வரை வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரானது திறக்கப்பட்டது. இதையடுத்து கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான மதுரை ஆழ்வார்புரம் பகுதிக்கு வைகை நதி நீர் வந்தடைந்தது. இதனை வரவேற்கும் விதமாக வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பில் மீனாட்சி அம்மன் மற்றும் கருப்பசாமி கள்ளழகர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் பூக்களை தூவி வைகை நதி நீரினை வரவேற்றனர்.
அப்போது சிறப்பு பூஜைகள் செய்து வைகை நதி நீரை வரவேற்ற சிறுவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வைகை நதி பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டபடி வரவேற்றனர். கையில் கிளியுடன் மீனாட்சி அம்மன் போன்று வேடம் அணிந்த சிறுமியும் கையில் அரிவாளுடன் கருப்பசாமி வேடமிட்ட சிறுவனும் கள்ளழகர் வேடமிட்ட முதியவரும் ஒரு சேற வைகையாற்றில் நின்றபடி வைகை நதி நீரினை வரவேற்றததை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
கள்ளழகர் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழந்தருளும் நிகழ்வு என்பது வைகையாற்று பகுதி அமைந்துள்ள தேனி, தேனூர், சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்பதால் ராமநாதபுரம் வரை வைகைநீர் சென்றடையும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இது குறித்து பேசிய வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன்," கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது இது போன்று வைகை நதியிலிருந்து தண்ணீர் வருவதை வரவேற்கும் விதமாக கடவுள் வேடமிட்ட குழந்தைகளும் முதியவர்களும் பூக்கள் தூவி வரவேற்றுள்ளோம் இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வைகை நதி என்பது புனிதமானது இதனை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் கழிவுகளை கலக்கக் கூடாது" என தெரிவித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications