“துணை நிற்கிறோம்.. என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகவில்லை?” திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சு சமீப காலமாக, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், திமுக எம்பிக்கள் குறித்து மாணிக்கம் தாகூர் பேசியிருப்பது இந்த சலசலப்புகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், விஜய் உடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு கோஷ்டி கோரிக்கை வைத்து வருகிறது. இதற்கிடையில்தான் மாணிக்கம் தாகூரின் கருத்துக்கள் காங்கிரஸ்-திமுக மோதலாக வெடித்திருக்கிறது.

Manickam Tagore

என்ன பேசினார் மாணிக்கம் தாகூர்?

இன்று மதுரையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக எம்பிக்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அவர் பேசியதாவது, "உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, படிக்கட்டிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தி விட்டு வந்து உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

மக்களவையில் அமளி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததற்காகவும், எதிர்க்கட்சி எம்பிக்களை பேசவிடாமல் நிறுத்தியதற்காகவும் எதிராக நாங்கள் குரல் கொடுத்தோம். அதனால் கடந்த 3ம் தேதி எங்களை சஸ்பெண்ட் செய்திருந்தார்கள். நாங்கள் மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்.

காங்+கம்யூனிஸ்ட்.. திமுக எங்கே?

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இதை பார்க்கும் போது நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரியும்.

துணை நிற்கிறோம் என்று சொன்னவர்கள் எல்லாம் சஸ்பெண்ட் ஆகாமல் இருப்பது ஏன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் பாஜகவை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது.

திமுகவை சீண்ட காங்கிரஸ்

ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சைடில் சென்று வணக்கம் சொல்லும் பழக்கம் எல்லாம் காங்கிரஸ் காரர்களுக்கு கிடையவே கிடையாது. தைரியமாக இருப்பவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். எங்களை பொறுத்தவரையில் அன்போடும், மரியாதையோடும் எங்களை நடத்தினால்.. நாங்களும் அதே அன்போடும் மரியாதையோடும் நடத்துவோம். எங்களை அவமானப்படுத்தி கீழ்த்தரமாக பேசக்கூடியவர்களுக்கு அதே மொழியில் பதிலடி தருவோம்" என்று பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை குறி வைத்து காங்கிரஸ் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. குறிப்பாக சீன அத்துமீறல் குறித்து ராகுல் காந்தி பேசிய விஷயங்கள் புயலை கிளப்பியிருக்கின்றன. அதேபோல ராகுல் காந்தியை பேச தடுத்தது குறித்து காங்கிரஸ் எம்பிகள், சிபிஎம் எம்பிக்கள் கடுமையான விமர்சனங்களை அடுக்கினர்.

இதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், திமுக எம்பிக்கள் ஏன் தங்களுடன் கை கோர்க்கவில்லை என்று கதர் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கேள்வியைதான் மாணிக்கம் தாகூர் நேரடியாக கேட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+