Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி வரையறுத்துள்ளது" எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

gr swaminathan high court

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மலர்விழி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு 2021-ம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். என் கணவர் இறப்புக்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மன்னன் என்பவன் மக்களை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். மகாபாரதத்தில் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றாலும் மக்களைப் பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

கௌடில்யர், தனது குடிமக்களின் மகிழ்ச்சியிலேயே மன்னனின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்றும், அவர்களின் நலனிலேயே மன்னனின் நலன் உள்ளது என்றும் கூறுகிறார். தனது குடிமக்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதையே மன்னன் நல்லதாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மன்னனின் மிக உயர்ந்த கடமை தனது குடிமக்களைப் பாதுகாப்பதே என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. நிர்ணயிக்கப்பட்ட வரிகளை தனது குடிமக்களிடமிருந்து பெற்று அவர்களைப் பாதுகாக்கும் மன்னன் மட்டுமே தர்மத்தின்படி செயல்படுகிறான். நாம் 'மன்னன்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அரசாங்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பால் ஏற்படும் பிரச்சனைகள் எழும்போது அவர்களை மீட்க விரைந்து செயல்பட்டு உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமை. எனவே தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தனது குடிமக்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ஏழையாக உள்ளார். எனவே அவர் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டப் போராட்டத்தையும் நடத்த தயாராக இருக்க வேண்டும். இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும்." என உத்தரவிட்டார்.

திருப்பரங்​குன்​றம் மலையில் தீபம் ஏற்றும் விவ​காரம் தொடர்​பாக திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த எம்​பிக்​கள் கடந்த 9 ஆம் தேதி மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லாவை சந்​தித்​தனர். அப்​போது சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று இயற்றப்​பட்ட தீர்​மான நோட்​டீஸை அவரிடம் வழங்​கினர். இந்த நோட்​டீஸில் 120 எம்​பிக்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+