வெரிகோஸ் வெயின்ஸ்.. மதுரை டிராபிக் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடத்தும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம்
மதுரை: கால்கடுக்க நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் டிராபிக் போலீசாருக்கு 'வெரிகோஸ் வெயின்ஸ்' என்னும் 'நரம்பு சுருட்டல் நோய்'க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு சுருட்டல் நோய். காலில் நரம்பு சுற்றிக்கொண்டிருப்பது. காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்படுவதே இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, ஏற்கெனவே குடும்பத்தில் வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பது மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

இதயத்துக்கு ரத்தத்தைச் சேர்க்க வேண்டிய நாளங்களின் வால்வுகள் பாதிப்படையும்போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. புவி ஈர்ப்பு விசை காரணமாக எல்லா ரத்தமும் பாதத்திலேயே தேங்கத் தொடங்கும். வால்வுகள் முறையாக இயங்கும்போது மட்டுமே ரத்தம் சீராக பாதத்திலிருந்து இதயத்துக்குச் செல்லும். அதில் பாதிப்பு வரும் போது ரத்த நாளங்களால் ரத்தத்தை மேலே இதயத்துக்கு அனுப்ப முடியாது. இதன் காரணமாக கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கத் தொடங்கும். அதிக நேரம் ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சில திரவங்கள் கருமையாக மாறும்.
இது அந்தப் பகுதியில் உள்ள சருமத்தின் தன்மையையும் கருமையாக மாற்றும். மேலும், அந்தப் பகுதியைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். சிலர் கால்களில் சூடாக இருப்பது போல் உணருவார்கள். ரத்தம் தேக்கமடைந்து கால்களில் நிற்பதால் இது போன்ற உணர்வு வரலாம். கால்கள் மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றலாம். இறுதிக்கட்டமாக அந்த வீக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை புண்களாக மாறும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரியப்போகிறது எனப் பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். சாலை பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள், ஒரு நாளில் பெரும்பாலான நேரம் நின்றுகொண்டேதான் இருப்பார்கள். அதிகமாக ஒரே இடத்தில் நிற்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவேதான் மதுரையில் உள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு வெரிகோஸ் வெயின்ஸ் மருத்துவ முகாம் நடத்த மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் திட்டமிட்டுள்ளது.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம் யூனியன் கிளப்பில் 'நண்பர்கள் தினமாக' கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் சண்முக. திருக்குமரன் 'எந்நாளும் நன்நாளே!' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மூத்த ரோட்டரி உறுப்பினர் வினோதன், 'ரோட்டரியும் சமூக பங்களிப்பும்' என்ற தலைப்பில் பேசினார். செயலாளர் முன்னாள் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்வில் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் பி.எல்.அழகப்பன், சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா, டி.சண்முகம், எழுத்தாளர் அத்வி மீடியா ஆதவன், ஜிஎன்கே., சிட்ஸ் அதிபர் ஜி.நவநீதகிருஷ்ணன், விநாயகா இம்பெக்ஸ் தொழிலதிபர் மகேந்திரன், வழக்கறிஞர் கார்த்திக், ஆடிட்டர் சேது மாதவா, பாலகுரு உட்பட 50க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், "பணி நேரத்தில் பெரும்பாலும் நின்று கொண்டே வேலை செய்யும் டிராபிக் போலீசார்களுக்கு வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் தவிர்க்க இயலாததாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே, அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, டிராபிக் போலீசாருக்கு 'ஆப்டிமம் ஹெல்த் கேர்' நிறுவனத்தின் உதவியுடன் 'வெரிகோஸ் சிறப்பு மருத்துவ முகாம்' நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது" என்று தீர்மானிக்கப்பட்டது.
"மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க 'குமரப்பா குடிலை' சரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தடைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட முடிவில் பொருளாளர் எஸ்.கதிரவன் நன்றி கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications