தனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மயக்கவியல் துறையில் படித்து வருகின்றார். வயது 29 ஆகிறது.
மதுரை முனிசிபல் காலனியில் இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடைய நண்பர் ராஜேஷ் என்பவர் உடன் தங்கி படித்து வந்துள்ளார்.

அறைக்கதவு
நேற்று இரவு வழக்கம்போல் காலேஜ் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். இரவில், தன்னுடைய நண்பர் வேலைக்கு சென்று விட்டதால் தனியாகத்தான் இருந்தார். இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டு கதவு அறை திறக்கப்படவேயில்லை.

ஊசி
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு ஓனர், போலீசாருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் பிணமாக விழுந்து கிடந்தார். அவருக்கு பக்கத்தில், அருகே ஊசி, மருந்துகள் சிதறி கிடந்தன. மேலும் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருந்தது.

பணிச்சுமை
அதில், அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.இதையடுத்து மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். உதயராஜ் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து 3 மாதங்கள்தான் ஆகின்றதாம். அதனால் அவரது இறப்பு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஷ ஊசி
"இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா" என்று அவர்கள் கதறி அழுதது மனதை உருக்கிவிட்டது. மயக்கவியல் துறை என்பதால் பெரும்பாலும் எல்லா ஆபரேஷன்களிலும் இவர்கள் கூடவே இருக்கும்சூழல் உள்ளது. இது மனரீதியான பாதிப்பு, உளைச்சலுக்கும் ஆளாகும் என்பது பொதுவான இயல்பு. இதில், உதயராஜுக்கு மன உளைச்சல் அதிகமாகவே இருந்திப்பதாக தெரிகிறது. அதனால்தான் விஷஊசி போட்டுக் கொண்டு தற்கொலை வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications