ரூ.12 கோடி.. திருமலைநாயக்கர் மகால் ஆய்வு.. உடைந்து விழுந்த கட்டுமானம்.. தப்பிய அமைச்சர் எ.வ வேலு
மதுரை: திருமலை நாயக்கர் மகாலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. அதனை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானம் உடைந்ததில் அதிகாரி தவறி விழுந்த நிலையில் அமைச்சர் எ.வ. வேலு நூலிழையில் கீழே விழாமல் தப்பினார்.
செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணி ரூ.12 கோடி செலவில் நடந்து வருகிறது. இங்குள்ள தர்பார் ஹால், பள்ளியறை, நாடக சாலை, நூலகம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்படுவதாக கூறினார். இங்குள்ள தளத்திற்கு போடக்கூடிய கற்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையின் சோதனை மாதம் மாதம், வாரம் வாரம் நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய அரசை கேட்டால் வருமானவரி சோதனை,எங்களது பணி என்று சொல்வார்கள்.
எங்களை கேட்டால் பழிவாங்கும் நடவடிக்கைகள் என சொல்வோம். நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், வருமான வரித்துறை சோதனைகளை தவிர்த்து இருக்கலாம். தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் பன்முகம் கொண்டவர். அவர் வெறும் எம்.பி. மட்டுமல்ல. கல்வியாளர், தொழில் அதிபர் ஆவார். பலமுறை இதுபோன்ற சோதனைகளை ஜெகத்ரட்சகன் சந்தித்து இருக்கிறார்.
இந்த வருமானவரி சோதனை என்பது தி.மு.க.வை அச்சுறுத்தும் செயல். ஆனால் இது போன்ற அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதையும் சந்திப்போம். மதுரை வைகை ஆற்றங்கரையில் மீதமுள்ள சாலைப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும் போது ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடனை வைத்துவிட்டு போய்விட்டார்கள்அதற்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடியை தமிழக அரசு வட்டி கட்டி வருகிறது, இப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக ஆய்வு அமைச்சர் எ.வ வேலுவும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டிருந்த போது கட்டுமான பணியின் மீது நின்று கொண்டிருந்த அதிகாரி கட்டுமானம் உடைந்து தவறி விழுந்தார். அதில் அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் எ.வ வேலு நூலிழையில் தப்பினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் மாவீரன் படம் போல எத்தனை பேட்ச் ஒர்க் பார்க்க வேண்டியிருக்குமோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications