மதுரை தீ விபத்தில் 9 பேர் பலியான சோகம்! சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் ஆய்வு
மதுரை: மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 90க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சுற்றுலா ரயில் ஒன்று தென் மாநிலத்தில் இருக்கும் புனித தலங்களுக்கு வந்திருக்கிறது. இந்த ரயில் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு மதுரை அருகே நின்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை சுமார் 4 மணியளவில் ரயிலில் இருந்த சிலர் டீ குடிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

நின்றுக்கொண்டிருந்த பெட்டியில் தீ எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீ பற்றிய ரயில் பெட்டிகளை மட்டும் தனியாக பிரித்துவிட்டு தீயை அணைக்க போராடியுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 2 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன.
ஆனால் அதன் பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை மொத்தம் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தவிர 4 பேர் மூச்சுத்தினறல் காரணமாக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிண்டரில் சமைக்க முயன்றதால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்களின் கூற்றை உறுதி செய்யும் விதமாக தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியிலிருந்து கேஸ் சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புனித தலங்களுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications