கல்யாணத்துக்கு வந்த அமைச்சரிடம் கட்சிக்காரர் குமுறல்! அடுத்து நடந்த ட்விஸ்ட்! பற்றவச்சுடியே பரட்டை!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூருக்கு திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் மூர்த்தியிடம், அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கேட்பதாக பற்ற வைக்க, சூடான அமைச்சர் மூர்த்தி நேராக ரெய்டு நடத்தி அதிகாரிகளை அலறவிட்டார்.
''இங்க வாயா உன்கிட்ட யாரு பணம் கேட்டது'', என பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே கட்சிக்காரரை அழைத்துச் சென்று அமைச்சர் மூர்த்தி கேள்வி எழுப்பியதால் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ஆடிபோய்விட்டனர். மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சொத்து வாங்குவோர், விற்போரை தவிர கண்டவர்கள் உள்ளே வரக் கூடாது என்பதையும் கறாராக தெரிவித்தார்.

மேலூர் என்பது மதுரை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி. அமைச்சர் மூர்த்தி தான் மேலூர் பகுதிக்கும் மாவட்டச் செயலாளர். அப்படியிருக்கும் போது அவரிடம் கட்சிக்காரர்கள் முறையிடமாட்டார்களா என்பது பற்றி கூட யோசிக்கமல் ஓரிருவர் செய்த தவறால் ஒட்டுமொத்த அலுவலக ஊழியர்களும் அமைச்சரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது.
இதனிடையே அந்த சோதனையின் போது எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு சென்ற அமைச்சர் மூர்த்தி அடுத்த முறை புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதையும் தெரியப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை சற்று முன்கோபம் கொண்டவர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை பேசக்கூடியவர். ஒரு சில நேரம் அமைதியாகவும் ஒரு சில நேரம் ஆவேசமாகவும் ஆய்வுக்கூட்டங்களில் பேசக்கூடியவர். அமைச்சர் மூர்த்தி இதற்கு முன்னாள் சென்னை, ராமநாதபுரம் கோவை உட்பட பல இடங்களில் கள ஆய்வுக்கு சென்று சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார். அப்போது பல இடங்களிலும் ரியல் எஸ்டேட் முகர்வர்களை கூட அலுவலகத்திற்குள் வரக்கூடாது என எச்சரிக்கவும் செய்தார்.
சார் பதிவாளர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு சில இடங்களில் பத்திரப் பதிவு செய்ய வருவோரிடம் வசூல் வேட்டை நடத்தப்படுவதை யாரும் மறுக்க இயலாது. முடிந்தவரை பத்திரப்பதிவு நடைமுறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ள அரசு இன்னும் பல்வேறு புதுமைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications