அமைச்சர் மூர்த்தி நடத்தும் விசேஷ ஜல்லிக்கட்டு! கோல்டு காயின்ஸ் -புல்லட்..! மலைக்க வைக்கும் பரிசுகள்!
மதுரை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் நாளை சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிறார் அமைச்சர் மூர்த்தி.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில் தங்க நாணயங்கள், புல்லட், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெசின், 1,000 சைக்கிள்கள், என மலைக்க வைக்கும் பரிசுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் இன்னமும் அதனைக் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள் அமைச்சர்கள்.

நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் யார் நம்பர் 1 இடத்தை பிடிப்பது என்ற போட்டி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சேகர்பாபு, மூர்த்தி ஆகிய மூவருக்கும் இடையே உள்ளது.
இதனால் தான் இந்த மூன்று பேரும் வித்தியாசமான முறையில் இன்னமும் ஸ்டாலினின் பிறந்தநாளை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகிறார்கள்.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையே விஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் இதுவரை எங்கும் நடந்திராத வகையில் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நாளைய தினம் மதுரை சத்திரப்பட்டியில் நடத்துகிறார் அமைச்சர் மூர்த்தி.
இதற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வரும் அமைச்சர் மூர்த்தி பார்வையாளர்களுக்காக சிறப்பு கேலரிகளையும் அமைத்திருக்கிறார்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காகவும் அமைச்சர் மூர்த்தி வாங்கியுள்ள தங்க நாணயங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் தான் எங்கள் பெருமை எங்கள் முதல்வர் என்ற முழக்கத்துடன் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை மதுரையில் நடத்தினார் அமைச்சர் மூர்த்தி. அதற்குள் அடுத்த நிகழ்ச்சியை நடத்தி தலைமையின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications