ஒரு காலத்தில் மண்டவெல்லம் விற்ற எடப்பாடி.. வேலை போட்டுக் கொடுத்ததே நான் தான்! அமைச்சரின் அட்டாக்!
மதுரை: காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொள்வார் எனவும், திமுக கூட்டணிக்கு கங்கிரஸ் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும், காங்கிரசில் ஆள் இல்லை எனவும் நாம் இல்லாமல் காங்கிரஸ் அரசியல் நடத்த முடியாது என திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடியாகப் பேசியுள்ளார். மேலும், மண்டவெல்லம் விற்ற எடப்பாடிக்கு வேலை போட்டுக் கொடுத்ததே தான் தான் எனவும் கூறியுள்ளார்.
மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலை குனியாது திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்," மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்று விடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். நாம் பல பேரை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தோற்கடிக்க வேண்டும்.

மதுரை பொதுக்கூட்டம்
மத்தியஅரசு நியாயமானதை சொன்னால் ஏற்போம். நியாயமற்றதை சொன்னால் ஏற்க மாட்டோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் நமக்கு மோசமான அளவில் நிதி கொடுக்கிறார்கள். பீகார் உத்தரபிரதேசத்திற்கு அதிக நிதி கொடுக்கிறார்கள். அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். நிர்வாகிகள் சீட்டுக்காக அங்கு உள்ளனர். நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதற்காக வருத்தப்படவில்லை. மிட்டா மிராசுகளை பண்ணையார்களை எதிர்த்து உருவானது தான் நம் இயக்கம்.
ராஜகண்ணப்பன் பேச்சு
காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். காங்கிரசை பற்றி நான் குறை சொல்லவில்லை. காங்கிரசில் ஆள் இல்லை. நாம் இல்லாமல் காங்கிரஸ் அரசியல் நடத்த முடியாது. அது முதல்வர் முடிவு எடுத்துக்கொள்ளட்டும். தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. மதுரையில் மாநாடு நடைபெற்றது யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள். மற்றவர்கள் 15 வயது உள்ள ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். எம்ஜிஆர் திமுகவின் இருந்து ஒரு சின்ன அரசியல் செய்தார். எம்ஜிஆர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்ததால் தான் பக்குவப்பட்டார். நமது முதல்வர் 55 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். யார் பின்னால் எங்களை போன்றவர்கள் செல்ல வேண்டும் என உள்ளது. எனக்கு பின்னால் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ ஆனவர். என்னை சந்திக்க ஜெயலலிதா அழைத்த போது சும்மா சென்று வா எனச்சொன்ன தலைவர் கருணாநிதி. என்னை பிள்ளை போல வளர்த்தவர் கருணாநிதி.
2026 தேர்தல் அரசியல்
அரசியல் தலைவருக்கு இலக்கணமானவர் கருணாநிதி. நான் இளையான்குடியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற போது என்னை அதிமுக கட்சிக்கு அழைத்தவர் ஜெயலலிதா. நான் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் போது 64ஆயிரம் பேருக்கு வேலை போட்டு கொடுத்தேன். இப்போது அப்படி போட முடியவில்லை. மந்திரி பதவி என்பது வரும் போகும். அதிமுகவில் இப்போது இருப்பவர்கள் தலைவர்கள் இல்லை. ஒருகாலத்தில் மண்டைவெல்லம் விற்றவர் எடப்பாடி பழனிசாமி. தொழில் நஷ்டமடைந்து என்னிடம் வந்தார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை போட்டு கொடுத்தவன்.
அமித்ஷா
பின்பு செங்கோட்டையனை அழைத்து வந்தார். தற்போது அமித்ஷா பிடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அங்கு தங்கமணி வேலுமணி வீரமணி எல்லாம் MONEY MONEY என உள்ளனர். நன்றாக சம்பாதித்து இன்று பெரிய கோடீஸ்வரராக எடப்பாடி உள்ளார். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படும் இயக்கம் திமுக அல்ல.
ஸ்டாலினை விட்டுவிட்டால் நமக்கு நல்லதல்ல. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்பது போல யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. அரசியல்வாதி என்பது தொழில் தான்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications