பஞ்சப் பராரியாக வந்திருக்கீங்களே... பாவமா இருக்கு... செல்லூர் ராஜூ சர்ச்சை பேச்சு
Recommended Video
மதுரை: மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீங்களே, பாவமா இருக்கு எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மீடியாக்களின் லைம் லைட்டில் இடம்பிடித்துவிடுவார்.
அந்த வகையில் மனு அளிக்க வந்தவர்களை பார்த்து, பஞ்சப் பராரி எனப் பேசியது அவரை புதிய சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

வடக்கு தொகுதி
மதுரை வடக்கு தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த இரண்டு நாட்களாக கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் கோரிக்கை மனுக்கள் பெறுகின்றனர்.

சர்ச்சை பேச்சு
இந்நிலையில் மதுரையில், தன்னிடம் மனு அளிக்க வந்தவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீர்களே, பாவமா இருக்கு என செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உடல் சோர்வு
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்லூர் ராஜூ உடல் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், ஓய்வு கூட எடுக்காமல் அந்த நிலையிலேயே மனுக்களை வாங்க வந்ததால் அவரது முகத்தில் அயர்வு தெரிந்தது.

கட்டுப்பாடு
ஒரு கட்டத்தில் கூட்டம் முண்டியடித்து ஏறியதால், கோபமான அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களை தள்ளி நிற்கும்படி கூறினார். இதனிடையே அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications