எடப்பாடியாரை குஷிபடுத்திய செல்லூரார்... மதுரையில் ராஜ வரவேற்பு அளித்து அசத்தல்
மதுரை: திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ராஜ வரவேற்பு கொடுத்து குஷிபடுத்தியுள்ளார்.
திண்டுக்கல் அடியனூத்தில் ரூ.327 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு முதல்வர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் இரண்டு மாவட்ட அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மதுரை விமான நிலையம் முதல் அவுட்டர் பைபாஸ் சாலை வரை அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சிகளை கண்டு முதல்வர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி ஜீப்பில் முதல்வரை அழைத்துசென்று வரவேற்பை காண வைத்துள்ளார் செல்லூரார். ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த முதல்வரை அமைச்சர் உதயகுமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இந்த முறை செல்லூர் ராஜா கோட்டாவில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டாமை படத்தில் வரும் சரத்குமாருக்கு ஊர்மக்கள் இருமருங்கிலும் நின்று வணக்கம் செலுத்துவதை போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலையின் இரு மருங்கிலும் ஆட்களை நிற்கவைத்து வரவேற்பு கொடுத்தார் செல்லூர் ராஜு. மேலும், பற்றாகுறைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்களை திரட்டி வந்து அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள வைத்தார்.
இதனிடையே கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பொதுவிடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கும் தமிழக அரசு, முதல்வர் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை 4 மணி நேரமாக ஒரே இடத்தில் அடைத்து வைத்தது ஏன் என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications