மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடியார் நினைத்தால் ராக்கெட் எடுத்துக்கிட்டு நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார்.. அமைச்சர் பலே!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil

    மதுரை: திமுகவினர் நிலவை காட்டி சோறு ஊட்ட மட்டுமே முடியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ராக்கெட்டில் நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார் என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

    மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் டெண்டர் இன்னும் விடவே இல்லை. அதற்குள் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்.

    தமிழக முதல்வர் சரித்திர சாதனையை சப்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறார். இதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

     மீண்டும் முதல்வராக வாழ்த்துகள்.. போற போக்கில் சபிச்சுட்டுப் போயிட்டிங்களே கிஷோரு.. உதறலில் குமாரு!! மீண்டும் முதல்வராக வாழ்த்துகள்.. போற போக்கில் சபிச்சுட்டுப் போயிட்டிங்களே கிஷோரு.. உதறலில் குமாரு!!

    நிர்வாக காரணங்கள்

    நிர்வாக காரணங்கள்

    பாரத் நெட் உள்கட்டமைப்பு திட்ட டென்டரில் முறைகேடு என அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் பணியிட மாற்றத்திற்கு உள்நோக்கம் கற்பித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காகவே இந்த பணியிடமாற்றம்.

    விருதுகள்

    விருதுகள்

    திமுக 5 முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற முடியவில்லை. ஆனால் தற்போது அதிமுக அரசுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகத்தை மறந்து பேசுகிறார். அது இயலாமையை காட்டுகிறது.

    பெருமை

    பெருமை

    இறுதியில் விருது கொடுத்தவர்களை அடிப்போம் என சொல்லும் அளவுக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளதை கூறியுள்ளார். இதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது கொடுத்துள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

    ஆம்ஸ்ட்ராங்

    ஆம்ஸ்ட்ராங்

    இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட அதில் களங்கம் ஏற்படுத்துவது, குற்றம் கண்டுபிடிப்பது, விவாதம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். திமுக நினைத்தால் நிலாச் சோறுதான் சாப்பிடும். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் நிலாவுக்கு ராக்கெட்டில் சென்று ஆம்ஸ்ட்டிராங் போல் இறங்குவார் என்றார்.

    English summary
    Minister Udhayakumar says that if CM Edappadi Palanisamy wants then he will land in Moon like Armstrong.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X