அப்டியா.. இதுதான் அழகிரி கட்சி கொடியா.. பயங்கரமா இருக்கே.. வைரலாக்கும் ஆதரவாளர்கள்.. !
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் கட்சி கொடி இதுதான் எனவும் ஒரு படத்தை அவரது ஆதரவாளர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டன.

தனிக்கட்சி அழகிரி
இந்த நிலையில் அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை முன்வைத்து ஏராளமான செய்திகள் வலம் வந்தன. கலைஞர் திமுக என தனிக்கட்சியை பாஜக ஆதரவுடன் அழகிரி தொடங்குவார் என முதலில் கூறப்பட்டது.

தேர்தலில் என் பங்கு இருக்கும்
பின்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் மு.க. அழகிரிதான் முதல்வர் வேட்பாளர் என கூறப்பட்டது. ஆனால் மு.க. அழகிரியோ, அத்தனையையும் நிராகரித்த கையோடு சட்டசபை தேர்தலில் எனது பங்கும் இருக்கும்; ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிக்கிறேன் என பொடி வைத்து பேசினார்.

அழகிரி ஆதரவாளர்கள்
இதனிடையே அழகிரி தனிக்கட்சி தொடங்குவது உறுதி என நம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அத்துடன் அழகிரி தொடங்கப் போகும் கலைஞர் திமுக கட்சிக்கான கொடி இதுதான் எனவும் ஒரு படத்தை தங்களுக்கிடையே அழகிரி ஆதரவாளர்கள் பகிர்ந்தும் வருகின்றனர்.

அழகிரி கட்சி கொடி
அதில் திமுகவின் கருப்பு சிவப்பு கொடியின் நடுவில் கருணாநிதி, அழகிரி படங்கள் இடம்பெற்றுள்ளன. கருணாநிதி, அழகிரி இருவரது படங்களும் மஞ்சள் நிற பின்னணி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட அழகிரி ஆதரவாளர்கள், தேர்தலில் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என அழகிரி போலவே பூடகமாக பேசுகின்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications