ரஜினி அரசியலுக்கு வரலை.. என்னத்த ஆலோசிக்கப் போகிறோம்? உற்சாகத்தை தொலைத்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள்
மதுரை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகத்தை இழந்த நிலையில் மதுரை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்.. அவருடன் மு.க. அழகிரி, கலைஞர் திமுக கட்சியை தொடங்கி எப்படியும் கூட்டணி வைப்பார். இது திமுகவுக்கு நெருக்கடி தரும் என்பதுதான் மு.க. அழகிரி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ரஜினி அறிவிப்பால் அதிர்ச்சி
இந்த உற்சாகத்துடன் மதுரையில் அழகிரி இன்று கூட்டிய ஆலோசனை கூட்டத்துக்கு தடபுடலான ஏற்பாடுகளை செய்தும் வந்தனர். ஆனால் திடீரென ரஜினிகாந்த் அரசியக்கு வரப்போவது இல்லை என அறிவித்தார். இது அழகிரி ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆலோசனை கூட்டம்
இதனால் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள். இன்று மாலையில் மதுரையில் அழகிரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதிலும் ஆதரவாளர்கள் முனைப்பு காட்டாமல் இருக்கின்றனர். இன்றைய ஆலோசனை கூட்டத்திலும் கூட அழகிரி அப்படி ஒன்றும் அதிரடியாக முடிவு எடுக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.

ஜகா வாங்கும் அழகிரி?
ஒருவேளை பாஜகவின் நெருக்கடி இருந்தால் மட்டுமே கலைஞர் திமுகவை அழகிரி அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் கூடிக் கலைந்துவிட்டு தேர்தல் தேதி அறிவிக்கட்டும்; எங்களது நிலைப்பாட்டை அறிவிக்கிறோம் என அழகிரி தரப்பு ஜகா வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.

அழகிரி சாய்ஸ் அமமுக?
தமிழகத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு 3-வது வலிமையான கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்பதை அழகிரி தரப்பும் உணர்ந்தே இருக்கிறது. இதனால் தேர்தல் நெருங்கும் வரை மவுனமாக இருந்துவிட்டு தேர்தலின் போது மறைமுகமாக கடந்த காலங்களைப் போல அமமுகவுக்கு கூட வாக்களிக்க அழகிரி உத்தரவிடக் கூடும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications