சென்னையில் அமித்ஷாவை சந்திக்கிறாரா மு.க. அழகிரி? மதுரையில் நவ.20-ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!
மதுரை: தமிழகம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்திக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மதுரையில் நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம் அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தை அமித்ஷாவின் தமிழகம் வருகை செய்தி பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக மவுனமாக இருந்த மு.க. அழகிரி இப்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார்.
வழக்கம் போல திமுகவை வறுத்தெடுத்து பேட்டி கொடுத்தார் மு.க. அழகிரி. மேலும் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் மு.க. அழகிரி கூறினார். அழகிரியின் இந்த பேட்டி திமுகவினரை அதிர வைத்திருக்கிறது.

அமித்ஷாவை சந்திக்கிறார் அழகிரி?
இந்த நிலையில் சென்னை வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க மு.க. அழகிரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக தமது ஆதரவாளர்களுடன் நவம்பர் 20-ந் தேதி மதுரையில் அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். தீபாவளி வாழ்த்துக்காக முக்கிய நிர்வாகிகளுக்கு போன்போட்டு பேசிய அழகிரி மதுரை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவும் அழைத்து இருக்கிறார்.

கலைஞர் திமுக?
இது தொடர்பாக அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவையின் நிர்வாகிகளிடம் நாம் பேசினோம். அழகிரி தங்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார்.. அங்கே போனால்தான் அண்ணன் என்ன முடிவில் இருக்கிறார் என தெரியும். எங்களிடம் பேசியவரை கலைஞர் திமுக என்ற தனிக்கட்சி தொடங்கும் முடிவில்தான் அண்ணன் உறுதியாக இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் பட்டும்படாமல் நமட்டுச் சிரிப்புடன்.

வாக்குகள் பிரிப்பு
திமுக, அதிமுகவின் வாக்கு வங்கிகளைப் பிரிக்க அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகியவை களத்தில் இருக்கின்றன. இந்த 3 கட்சிகளும் எந்த திராவிட கட்சியின் வாக்குகளை பிரிக்கிறது? எந்த கட்சியின் வெற்றியை தடுக்கிறது? என்பது குறித்த அலசல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

டார்கெட் திமுக வெற்றி
இந்த நிலையில் பாஜகவின் வெளிப்படையான அல்லது மறைமுக ஆதரவுடன் அழகிரி தொடங்கலாம் என கூறப்படும் கலைஞர் திமுகவும் களம் இறங்க வாய்ப்புகள் அதிகம். திமுகவின் வாக்குகளை கணிசமாகப் பிரிக்கும் வகையில் அழகிரியின் கலைஞர் திமுகவை பாஜக இறக்கலாம். அழகிரியின் கலைஞர் திமுகவுக்கு ஆகக் குறைந்த செல்வாக்கு கூட இல்லாமல் போனாலும் திமுக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் குழிபறிக்க உதவும் என்பது பாஜகவின் நம்பிக்கை.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி












Click it and Unblock the Notifications